'இந்தப் பாட்டுக்காக எம்.எஸ்.வி திட்டினார்': பாடகி கல்பனா அனுபவங்கள்

கல்பனா, மனதோடு மனோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்..

கல்பனா, மனதோடு மனோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்..

author-image
WebDesk
New Update
Singer Kalpana Raghavendar singer

Singer Kalpana Raghavendar

என் ராசாவின் மனசிலே படத்தில் வரும், போடா போடா புண்ணாக்கு... போடாத தப்புக் கணக்கு பாடல் மிக பிரபலம். அதேபோல, ‘புன்னகை மன்னன்படத்தில் கமல், சாப்ளின் செல்லப்பாவாக வரும் வாக்கிங் ஸ்டிக் காட்சியும்…

Advertisment

அந்த பாட்டை பாடியதும், இந்த காட்சியில் நடித்ததும் பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் என்பது உங்களுக்கு தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணிப் பாடகி, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சைகை மொழி ஆசிரியை எனப் பன்முகத் திறமை கொண்டவர்.

ஒருமுறை கல்பனா ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான மனதோடு மனோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்..

Advertisment
Advertisements

அப்போது வாணி ஜெயராம் பாடிய பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் பாடலை கல்பனா பாடினார்.

‘இது வாணி அம்மாவோட பாட்டு. எம்.எஸ்.வி அங்கிள் நிகழ்ச்சியில இந்த பாட்டு பாடுனதுக்கு நான் திட்டு வாங்குனது எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு.  

’பாட்டை கொஞ்சம் உயிர் கொடுத்து ஃபீல் பண்ணி பாடு. உடம்பும், தொண்டையும் மட்டும் தான் இங்க இருக்கு. உன் கவனம் வேற எங்கெயோ இருக்கு’ திட்டுனாரு.

அப்புறம் இந்த பாட்டை இன்னொரு டேக் எடுத்தாங்க.

ஆனா உண்மையா நான் முதல்ல பாடுனதுக்கும், அவர் திட்டுனதுக்கு அப்புறம் பாடுனதுக்கும் நிறைய வித்தியாசம் புரிஞ்சுகிட்டேன். ஒரு பாடகிக்கு சகலமும் அந்த பாட்டு மேல இருந்தாகணும். அப்போதான் அந்த பாட்டோட பெஸ்ட் நமக்கிட்ட இருந்து வரும்’ என்று கல்பனா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: