புஷ்பவனம் குப்புசாமி-அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி அகர்வாலுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் பல்லவி தன் கணவனுடன் சேர்ந்து ப்ரீ ஹனிமூன் சென்ற வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களையும் வழங்கினர்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.
மேலும் மகளின் திருமணம் அன்று நடந்த நிகழ்வுகளை அனிதா தனது யூடியூபில் நேரலையாக பதிவிட்டார்.
இந்நிலையில்’ பல்லவி தனது கணவருடன் ப்ரீ ஹனிமூன் சென்ற வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில்’ ஒரு சூப்பரான ரிசார்ட்டில் இருக்கும் வீடியோவை பதிவிட்டு’ உங்களில் எத்தனை பேருக்கு இந்த அழகான ரிசார்ட் தெரியும்? என எழுதியுள்ளார்.
அதைப்பார்த்த பலரும், இது பாண்டிச்சேரியில் உள்ள ஓசன் ஸ்பிரே ரிசார்ட்.. கண்டிப்பாக போக வேண்டியம் என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“