நான் இன்னைக்கு இப்படி இருக்க முக்கிய காரணமே அவர்தான்: சைந்தவி எமோஷனல்

நான் ஒவ்வொரு விஷயங்கள் செய்யும்போது எது சரி எது தவறு என்று என்னை வழிநடத்துவது அவர்தான் என்று கண்கலங்கிய படி சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் ஒவ்வொரு விஷயங்கள் செய்யும்போது எது சரி எது தவறு என்று என்னை வழிநடத்துவது அவர்தான் என்று கண்கலங்கிய படி சொல்லிக் கொண்டிருந்தார்.

author-image
WebDesk
New Update
Saindhavi

Saindhavi

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி சரிகமப’. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது.

Advertisment

அந்தவகையில் நேற்று (ஜூன் 23) டெடிகேஷன் ரவுண்டு நடந்தது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பாடல்களை டெடிகேஷன் செய்து பாடினர்.

அப்போது போட்டியாளர்களின் நெகழ்ச்சியான தருணங்களை பார்த்து கண்கலங்கி சைந்தவியிடம், வி.ஜே அர்ச்சனா, உங்களுடைய அப்பா உங்களுக்கு எவ்வளவு சப்போர்ட்டா இருப்பாங்க என்று கேட்க, சைந்தவி மேலும் எமோஷனலாகி, ”நான் இன்று இவ்வளவு வளர்ந்தற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பா தான்.

Advertisment
Advertisements

சின்ன சின்ன விஷயத்திற்கும் அப்பா என்னை மோட்டிவேஷன் செய்து கொண்டே இருப்பார். நான் ஒவ்வொரு விஷயங்கள் செய்யும்போது எது சரி எது தவறு என்று என்னை வழிநடத்துவது அவர்தான் என்று கண்கலங்கிய படி சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது சர்பிரைஸாக நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்குள் சைந்தவி அப்பா வந்தார்.

அப்பாவை பார்த்த சைந்தவி உடனே ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து அழுதார்.

அப்போது பேசிய சைந்தவி அப்பா, ”என்னுடைய மகள் தான் என்னுடைய வீட்டின் தேவதை. அவளுக்காக நான் எதை வேண்டும் என்றாலும் செய்வேன். அவளுடைய சந்தோம்தான் எங்களுக்கு முக்கியம். அவள் சின்ன சின்ன ஈவண்டில் கலந்து கொள்ளும் போதும் நான் அவளை உற்சாகப்படுத்துவேன்” என்று பேசினார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: