புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் அமைந்துள்ளது நாடக கலை ஆராய்ச்சிக்கான ஆதிசக்தி கலாச்சார மையம். ஆதிசக்தி என்ற பெயரில் 1981-இல் வீனாபாணி சாவ்லா என்பவர் இதனை நிறுவினார்.
Advertisment
நவம்பர் 2014-இல் அவரது மறைவிற்கு பின் கலை இயக்குனர் வினய் குமார் மற்றும் நிர்வாக அறங்காவலர் நிம்மி ஆகியோர் இதனை நடத்தி வருகின்றனர். வீனாபாணி நினைவாக ஆண்டுதோறும் கலை விழா நடக்கிறது. இந்த ஆண்டு 9-வது பதிப்பு கலை விழா இன்று தொடங்கியது.
விழாவிற்கு இயக்குனர் வினய் குமார் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் நிம்மி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அலையன்ஸ் பிரான்ஸ் இயக்குநர் லாரன்ட் ஜாலிகாஸ் கலந்துகொண்டு குத்துவ்விளக்கு ஏற்றி கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
Advertisment
Advertisements
இன்றைய முதல் நாள் நிகழ்வில் பிரபல பாடகி சுபா முத்கல் இசை கச்சேரி நடைபெற்றது. சுபா முத்கல் பெண்கள், பாலியல் என்ற பிரிவுகளில் பாடிய பாடலுக்கு பவித்ரா சாரி என்பவர் தம்பூராவும், அனீஷ்பிரதன் என்பவர் தபேலாவும், சுதிர் நாயக் என்பவர் ஹார்மோனியமும் வாசித்தனர்.
இந்த இசை கச்சேரியை 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர். வருகிற 13-ம் தேதி வரை ஒவ்வவொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர்கள் இங்கே வந்துள்ளனர்.
செய்தியாளர்: பாபு ராஜந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“