சின்னப் பொண்ணா இருக்கும்போதே பாட்டுல அசத்தி இருக்காங்க... இவங்களை தெரியுதா?

பாடகி ஸ்வேதா மேனன் தனது இளம் வயதில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

பாடகி ஸ்வேதா மேனன் தனது இளம் வயதில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Swetha

தனது இனிமையான குரலால் தனக்கென தனித்த ரசிகர் பட்டாளம் கொண்டவர் பாடகி ஸ்வேதா மேனன். இவரது குரலில் வெளியான பாடல்கள் பெரும்பாலானவை மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவை. குறிப்பாக, வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற வா வாத்தி, தங்கமகன் படத்தில் இவர் பாடிய என்ன சொல்ல, 3 திரைப்படத்தில் இவரது குரலில் இடம்பெற்ற நீ பார்த்த விழிகள், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மரியான் படத்தில் இவர் பாடிய இன்னும் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்று.

Advertisment

இவரது தாயாரான சுஜாதாவும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இனிமையான படல்களை பாடி தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது பல தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெறும் பாடல் போட்டிகளில் இவர் நடுவராகவும் பங்காற்றி வருகிறார். இவரைப் போலவே ஸ்வேதாவும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக உள்ளார்.

 

வீடியொவைக் காண:

Advertisment
Advertisements

பாடகி சுஜாதா அவர்களின் புதல்வி சுவேதா மேனன் அவர்களின் ஆரம்ப காலத்தில் மேடையில் பாடிய அரிய காணொளி உங்கள் பார்வைக்கு நண்பர்களே என்றும் என்றென்றும் Ilaiyaraaja

Posted by Jagadeesh Ponns on Wednesday, August 21, 2024

இந்நிலையில், பாடகி ஸ்வேதா தன்னுடைய இளம் வயதில் தனியார் தொலைக்காட்சியில் பாடிய காணொளி தற்போது இணையத்தில் ட்ரெண்டாடி வருகிறது. குறிப்பாக, இளையராஜா இசையில் ஜானி திரைப்படத்தில் தனது தாயார் பாடிய "ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்" என்ற பாடலை அவர் பாடியுள்ளார்.

இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Viral Video Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: