உங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா? அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா?

உங்கள் குழந்தைகளுக்கு நண்பராக இருங்கள். எந்த நேரத்திலும் எதைப் பற்றியும் உங்களுடன் பேசமுடியும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

By: Updated: February 16, 2020, 12:27:33 PM

Suchitra Pillai

அவரைப் பொறுத்தவரை வானமே எல்லை. நடிப்பு, மாடலிங், அரங்கம், இசை என சுசித்ரா பிள்ளையின் ஆர்வம் விரிகிறது. தில் சஹ்தா ஹை, சத்தா, பக்கம் 3, தி வேலி உள்பட பல திரைப்படங்களின் நட்சத்திரம் அவர். லைக் எ மேன் நாட்டிய நாடகத்தில் அவருடைய திறம், பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. ஆல்ட் பாலாஜிக்காக, கெஹ்னே கோ ஹம்ஸஃபர் ஹை சீசன் 3 மற்றும் ஒரு புதிய நிகழ்ச்சி என இரண்டு வலைத் தொடர்களுக்கான படப்பிடிப்புகளில் மும்முரமாக இருக்கிறார்.

நெட்பிளிக்சில் வரவிருக்கும் (ரெட் சில்லீஸ் தயாரித்த) பீட்டால் மற்றும் மசாபா மசாபா ஆகிய தொடர்களை எதிர்பார்த்திருக்கிறார். இவ்வளவுக்கு இடையிலும், தன்னுடைய ‘ராக் அண்ட் ரோல்’ இரண்டாவது இசை ஆல்பத்தை விரைவில் வெளியிடவும் தயாராகிவருகிறார்.  நடிகர் லார்ஸ் கெட்சனைத் திருமணம் செய்துகொண்ட சுசித்ராவுக்கு, ஒரு அழகான மகள், அன்னிகா. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ’Parenting’ பகுதிக்காக உரையாடினோம். அதிலிருந்து சில பகுதிகள்…

To read this article in English

அன்னிகாவுக்கு 12 வயது ஆகிவிட்டது. அவரையொட்டி உங்களுக்கு மிகப்பெரிய சவால் எது?

வேகமாக மாறிவரும் அவளுடைய ஆளுமையோடு ஊடாடுவது! அவளிடம் முன்னர் கட்டுப்படுத்தக்கூடியது எதுவோ அது இப்போது கட்டுப்படுத்தமுடியாதது ஆகிவிட்டது. (சிரிக்கிறார்). உறுதியாகச் சொல்லலாம், அவளுக்கென ஒரு சிந்தனை இருக்கிறது; தான் பேசும் முறை உள்பட குறிப்பிட்ட பல விதயங்களில், அவள் கவன உணர்வோடு இருக்கிறாள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

ஓர் உதாரணம்..?

லார்சோ நானோ அவள் ஏதாவது செய்யவேண்டுமென விரும்புகையில், அவளிடம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சொல்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அவள் முகத்தைப் பார்த்தால் அவ்வளவு எரிச்சல் இருக்கும்; உடல் மொழியிலும்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்ததை உணர்ந்து, சமாதானப்படுத்த கட்டிப்பிடிப்பாள் அல்லது கைபேசியில் வருத்தம் தெரிவித்து குறுந்தகவல் போடுவாள்.

அவருடைய கேள்விகள் எல்லாம் எப்படி இருக்கும்?

அவை முடிவில்லாதவை. தான் ஏன் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதைப் போல பல. நான் படித்தது, பொறியியல். தொழில்ரீதியாக ஒரு நடிகர். படிப்பதை விட்டுவிட்டு வேறு துறைக்குப் போய்விடுகிறோம்; இது, அவளிடம் கேள்வியை உண்டாக்குகிறது.

எதற்காக அன்னிகாவுடன் வாக்குவாதம் வரும்?

ஐ பாடுக்கான நேரம்! லார்ஸ், தொலைக்காட்சி, கைபேசி திரைகளைப் பார்ப்பதற்கு அதிகபட்சம் 45 நிமிடம் என ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர். அதன் பிறகு, தொடர்ச்சியாக உரையாடல்கள்தான் நடக்கும். அவளிடம் கைத்தொலைபேசி இல்லை;ஆனால், உடன் படிப்பவர்களிடம் ’ஐபோன் 11’ இருக்கிறது. இதுபோன்ற சங்கதிகள் உரையாடலில் இடம்பெறும். கைபேசிக்குள் முடங்கிவிடுவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை அவளுக்கு பொறுமையாக எடுத்துச்சொல்வோம்.

Single kids issue, single child, தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் சுசித்ரா பிள்ளை!

அன்னிகாவுக்கு ஒரு கைபேசியைக் கொடுப்பதாக இருக்கிறீர்களா?

அடுத்த ஆண்டுக்குள்.. ஆனால் ஒரு அடிப்படையான தொலைபேசிக் கருவிதான், ஒரு தொடர்புகருவியாக மட்டுமே. எந்த நேரத்திலும் அவள் தனியாக இல்லை; வகுப்புகள் அருகில் உள்ளன. இப்போதைக்கு ஒரு தொலைபேசி தேவையில்லை. அவளோ அதைக் கேட்டுக்கொண்டேடான் இருக்கிறாள்.

2020-க்கான குடும்பத் தீர்மானங்கள் என்னென்ன?

ஒவ்வொரு வாரமும் ஓர் இரவு ஒன்றாகப் படம்பார்ப்பதென முடிவுசெய்திருக்கிறோம். அதை அப்படியே தொடரவேண்டும். பிறகு, அன்னிகாவும் நானும் சேர்ந்து வைர ஓவிய வேலைசெய்வோம். அவற்றை உருவாக்கும்போது, நாங்கள் பேசிக்கொள்கிறோம்; 7000-க்கும் மேற்பட்டத் துணுக்குகளை சிக்கலான வழியில் ஒன்றாக இணைப்பதில் மகிழ்ச்சி அடைவோம். அவ்வப்போது உலா போவோம். நடை செல்வோம்/. லார்சின் குடும்பம் டென்மார்க்கில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை விடுமுறையில் அங்கு போவோம். அங்கு அவள் தன்னுடைய மைத்துனி/ன, சகோதரர்களுடன் சிறிது காலத்தை மகிழ்ச்சியாகக் களிப்பாள்.

உங்களில் யாருடன் அன்னிகா ஒட்டுதலாக இருப்பார்?

இப்போதைக்கு, என்னிடம் அதிகம் என்று சொல்லலாம். அவர் முன்னர் அப்பா பிள்ளையாக இருந்தாள். அவர் நம்பர் டூவாக இருப்பதை விரும்பவில்லை! ஹார்மோன் வளர்ச்சிக் காலகட்டத்தில், பருவமடையும் கட்டத்தை நோக்கி சீராக நடைபோடுகிறாள்..இந்த வயதில், என்னை தன்னோடு தொடர்புபடுத்திக்கொள்வது அவளுக்கு தோதாக இருக்கிறது. அண்மையில் அவளைக் கவர்ந்தவை, பள்ளி நடப்புகள் என பலவற்றையும் பேசி இருவரும் ஒரே அரட்டையடித்துக்கொள்வோம்.

ஒற்றைப்பிள்ளையாக இருப்பதில் அவருக்கு ஏதாவது.. ?

தனியாக இருக்க வேண்டும் என்கிற பயம் அன்னிகாவுக்கு இருக்கிறது. உடன்பிறந்தார் யாரும் இருந்திருந்தால் அப்படி இருக்கவேண்டியதில்லை. இரவில் தனியாகத் தூங்குவது அல்லது லார்சும் நானும் அவளுடன் சேர்ந்து எப்போது வெளியேபோக முடியும் என யோசிப்பது.. இப்படியானவை அவளுக்கு தாங்கலாக இருக்கும். ஆனால் எங்களில் யாராவது ஒருவர் எப்போதும் அவளோடு இருப்போம். அவள் மெல்லமெல்ல வளர்ந்துவருகிறாள். இப்போது ஒரு பூனையைச் செல்லமாக்கிக் கொண்டிருக்கிறாள். எத்தனையோ சங்கதிகள் மெதுமெதுவாக வரும்.. அவள் அதிலிருந்து கற்றுக்கொள்வாள்.

உங்களைப் பற்றி ஒருவார்த்தை குறிப்பாகச் சொல்லவேண்டுமானால்..?

தனிப்பட்ட தூய்மை. தூங்குவதற்கு முன்னர் அன்னிகா குளிக்கவேண்டும். நாள் முழுவதும் பள்ளி, நடன வகுப்புகள், விளையாடுவது என மும்முரமாக இருக்கிறாள்… ஒரு குளியல் குழந்தைகளை அமைதிப்படுத்தும, வழமைக்கு இலகுவாகக் கொண்டுவரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

ஓர் அப்பாவாக லார்ஸ் எப்படி?

அப்படியே, அவ்வளவு அறிவாளி. அவர் கைகோர்த்தவர்.

உங்களுடைய பரபரப்பான படப்பிடிப்புகளுக்கிடையே நீங்கள் எப்படி ஒன்றாக இருக்க வாய்க்கிறது?

அன்னிகாவுக்கும் எனக்கும் நேரம்தான்… அவள் தனியாக இருப்பதாக உணரக்கூடாது என்பதற்காக நாங்கள் நிறைய பேசுவோம். நான் அருகில் இல்லாதபோது, தொலைபேசியில் பிடித்துவிட முடியும் என்பது அவளுக்குத் தெரியும்.

மேலும் படிக்க :மதங்களை தாண்டியும் இதயங்களை வென்ற காதல்… இன்ஸ்பையர் செய்த இந்து – முஸ்லீம் திருமணங்கள்!

அன்னிகாவின் ஒரு திறம் அண்மையில் வெளியில் வந்திருக்கிறது?

அவள் ஒரு சிறந்த பாடகி என்பது எங்களால் உணரமுடிந்தது. அவளுக்கு அற்புதமான குரல் வாய்த்திருக்கிறது. ஸ்டுடியோவில் அவளின் ஒரு பாடலைப் பதிவுசெய்து அதை யூடியூப்பில் ஏற்றினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் வளரும்போது தங்கள் மனதுக்குப் பிடித்தது, பிடிக்காததைக் கண்டறிவார்கள். அன்னிகாவை அவள் தற்சார்பாக இருப்பதை ஊக்குவிக்கிறோம்.

இறுதியாக நீங்கள் சொல்வது?

உங்கள் குழந்தைகளுக்கு நண்பராக இருங்கள். எந்த நேரத்திலும் எதைப் பற்றியும் உங்களுடன் பேசமுடியும் என்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் எனும் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். தாய்மை அதனளவில் தன்னலமற்ற தன்மையை அளிக்கும்.

அன்னிகா அப்படியாக உங்களோடு இயைந்துபோகிறாரா?

முழுமையாக..! எந்த வகையிலும் அவளுக்கு தீங்குதரும் ஆபத்து நேருமானால் அதைத் தீர்த்துவிட முடியும். அவள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறாள். எதையும் சேர்ந்து சமாளிக்க முடியும் என்பது அவளுக்குத் தெரிகிறது. நான் எங்ககே இருந்தாலும், தேவைப்பட்டால், எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு அவளிடம் ஓடிவிடமுடியும். இது அன்னிகாவுக்குத் தெரியும்.

தமிழில் இந்த கட்டுரையை எழுதியவர் தமிழ்க்கனல்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Single kids issue they have the fear of being alone says suchitra pillai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X