/indian-express-tamil/media/media_files/2025/07/16/sinus-cold-headache-runny-nose-home-remedies-doctor-daisy-saran-2025-07-16-09-35-43.jpg)
Sinus Cold Headache Runny Nose Home Remedies doctor daisy saran
மழை மற்றும் குளிர் காலங்களில் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை சைனஸ். மூக்கு ஒழுகுதல், தும்மல், தலைவலி, சளி, மற்றும் ஓயாத ரன்னிங் நோஸ் போன்றவை இதன் அறிகுறிகள். சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட சில எளிய வழிகள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக பேசுகிறார் டாக்டர் டெய்சி சரண்.
வீட்டு வைத்தியங்கள்
ஆவி பிடித்தல்: தினமும் ஆவி பிடிப்பது சைனஸ் அடைப்பை நீக்க உதவும். தண்ணீரில் 10 கற்பூரவள்ளி இலைகள், 10 நொச்சி இலைகள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது கல் உப்பைச் சேர்க்கவும். இவை எளிதில் கிடைக்கவில்லையென்றால், தூதுவளை, தும்பை, துளசி இலைகளையும் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் ஆவி பிடிக்க வேண்டும். முகத்தில் அதிக வெப்பம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மூச்சுப் பயிற்சி: தினமும் 10 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி செய்வது சைனஸ் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வு. மூக்கின் இரு துவாரங்களையும் சுருக்கி வேகமாக மூச்சை வெளியேற்றும் பயிற்சியைச் செய்யலாம். நாடி சுத்தி போன்ற பயிற்சிகளும் நல்லது.
தவிர்க்க வேண்டியவை
தலைக்குக் குளித்தல்: தலைக்குக் குளித்த பிறகு, தலையை ஈரமின்றி நன்கு துடைத்து, சிறிது நேரம் வெயிலில் உலர வைப்பது அவசியம். தலையில் ஈரம் இருக்கக் கூடாது.
ஹேர் பேக்: ஹேர் பேக் பயன்படுத்தும் நாட்களில் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் குனிந்து வேலை செய்வதையும் தவிர்க்கவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பல வருட சைனஸ் பிரச்சனையையும் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.