பனிக்காலத்தில் தலைக்கு குளித்தால் சைனசைடிஸ் தலைவலி மற்றும் மூக்கடைப்பு வரும் என்றொரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், இது உண்மையிலேயே தவறான புரிதல் என்கிறார் பிரபல மருத்துவர் டாக்டர் சிவராமன்.
Advertisment
குளித்தல் என்றாலே தலைக்கு குளிப்பதுதான்! சைனசைடிஸ் நோயாளிகள் கூட நிச்சயமாக தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு குளிப்பதுதான் சைனசைடிஸ் தலைவலி வராமல் தடுப்பதற்கான ஒரு முக்கியமான வழி.
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே தலைக்கு குளிப்பதைத் தவிர்க்கலாம்.
உங்களுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும் போது.
Advertisment
Advertisements
சளி மிகவும் பச்சையாக இருக்கும் போது.
உடல் வலியுடன் காய்ச்சல் வரும் அறிகுறிகள் இருக்கும் போது.
மூக்கில் இருந்து பச்சையான சளி வரும் போது.
இந்த நாட்களில் மட்டும் தலைக்கு குளிப்பதைத் தவிர்த்துவிட்டு, மற்ற அனைத்து நாட்களிலும் தவறாமல் தலைக்கு குளிப்பது சைனசைடிஸ் பிரச்சனையைத் தடுக்க உதவும்.
ஆகவே, சைனசைடிஸ் உள்ளவர்கள் பயப்படாமல் தலைக்கு குளிக்கலாம். சரியான சமயத்தில் குளிப்பதைத் தவிர்ப்பது மட்டுமே முக்கியம்.