Advertisment

சுற்றுலா வாசிகளை அழைக்கும் புகழ்பெற்ற சீர்காழி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sirkazhi tourist place tamil nadu best tourist place in tamil nadu - சுற்றுலா வாசிகளை அழைக்கும் புகழ்பெற்ற சீர்காழி

sirkazhi tourist place tamil nadu best tourist place in tamil nadu - சுற்றுலா வாசிகளை அழைக்கும் புகழ்பெற்ற சீர்காழி

இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து இந்த வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சீர்காழி அமைந்துள்ளது.

Advertisment

இந்த கோயிலின் வரலாறு புராணக்கதைப்படி , பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினார் எனக் கூறப்படுகின்றது.

மேலும் பிரம்மன் உதவி வேண்டியதால், இங்குள்ள சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் அத்தோடு சிவபெருமானின் அனைத்துவடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன.

சீர்காழி "தோணிபுரம்" என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஏனெனில் சிவபெருமான் தோணியில் (படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் இவ்வாறு அழைக்கப்படுகின்றார்.

இந்தக் கோயிலை தரிசிப்பதற்காக உலகில் உள்ள பக்தர்கள் இங்கு வந்து வழிபடும் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் ஸ்தலமாக திகழ்கிறது.

மேலும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் அல்லது மகர சங்கராந்தியானது இங்குள்ள கோவில்களில் 3 தினங்கள் கொண்டாடப்படும்.

சீர்காழிப்பகுதியில் பல சிவாலயங்கள் அமைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இதில் கலந்துகொண்டு சிவபெருமானை பூஜிக்க எண்ணற்ற யாத்திரீகர்கள் சீர்காழிக்கு வந்து செல்வார்கள்.

இந்நிலையில், தீபாவளித் திருநாளில் சீர்காழி முழுதும் கோலாகலமான கொண்டாட்டங்களைக் காணமுடியும். கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்கு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment