/indian-express-tamil/media/media_files/2025/10/05/smoking-2025-10-05-16-33-24.jpg)
புகைப்பிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், பலர் உடல் உழைப்பின்மையால் ஏற்படுத்தும் ஆபத்துக்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். உணவுக்குப் பிறகு சிறிது தூரம் நடப்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்பது நமக்குத் தெரியும், ஆனால் சாப்பிட்ட உடனேயே அமர்வது புகைபிடிப்பதைவிட அதிக உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்றும் இதய ஆரோக்கியத்தை கெடுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் (KIMSHEALTH) இருதயவியல் துறையின் ஆலோசகரான டாக்டர் தினேஷ் டேவிட் கூறியதாவது, ”உணவு உண்ட உடனே உட்கார்ந்திருப்பது உங்கள் உடலுக்கு புகைபிடிப்பதைவிட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், எந்தவொரு உடல் உழைப்பும் இல்லாமல் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருப்பது மிகவும் மோசமானது. ஏனெனில் இது புகைப்பிடிப்பது போலவே இருதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
நிற்பது அல்லது நடப்பதை ஒப்பிடும்போது, உட்கார்ந்திருப்பதால் வளர்ச்சிதை மாற்றம் 30 சதவிகிதம் குறைகிறது. இது உடல் எடை அதிகரிப்பு தமனிகளில் கொழுப்பு படிதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம்" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
மேலும், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறார்கள். இது அவர்களின் உடல் உழைப்பை குறைக்கிறது. இதனால், வளர்சிதை மாற்றக் கோளாறு, உடல் பருமன் குறைந்த குளுக்கோஸ் தாங்கும் திறன் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. இது எல்லாம் இருதய நேய் வருவதற்கான முந்தைய காரணிகளாகும் என்றார்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் போது எப்படி தவிர்க்கலாம்
உங்கள் வேலை எவ்வளவு முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து செல்ல வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு நடக்கவும். நீங்கள் எழுந்து சென்று உங்கள் தண்ணீர் பாட்டிலில் நீர் நிரப்பிக்கொள்ளலாம்.
அப்போது உங்கள் முதுகையும், முதுகெலும்பையும் நேராக வைத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று மருத்துவர் சர்மா கூறினார். மேலும், எழுந்து செல்லாமல் ஒரே இடத்தில் இருப்பது மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். கவனக்குறைவு, பதற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.