பழங்கால பழக்கவழக்கங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் தரையில் உட்கார்ந்திருப்பது அத்தகைய நடைமுறைகளில் ஒன்றாகும்.
அவ்வாறு செய்வது, முதுகுத்தண்டின் வளைவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இன்னும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேத நிபுணர் வரலக்ஷ்மி யனமந்த்ரா இதைப் பற்றி விளக்கினார்.
பலருக்கு இது தெரியாது, ஆனால் நம் முதுகெலும்பு உண்மையில் நேராக இல்லை. இது நமது கழுத்து, மார்பு மற்றும் இடுப்புப் பகுதிகளில் மூன்று இயற்கையான வளைவுகளைக் கொண்ட ‘S- வடிவ’ அமைப்பாகும் என்று அவர் கூறினார்.
மேலும் தரையில் அமர்வதால் சில நன்மைகளை நிபுணர் பட்டியலிட்டார்
ஆரோக்கியமான முதுகெலும்பு வளைவு இருப்பது எலும்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய அம்சமாகும். மோசமான தோரணை, சாய்ந்து இருப்பது அல்லது முன்னோக்கி வளைந்து இருப்பது ஆகியவை இயற்கையான வளைவு இழப்புக்கான சில காரணங்கள். தரையில் அமர்வது உங்கள் முதுகெலும்புக்கு பலத்தை சேர்க்கிறது.
Hip flexors என்பது நமது இடுப்பு முதல் தொடை, கீழ் முதுகு மற்றும் இடுப்பு பகுதியுடன் இணைக்கும் தசைகள் ஆகும். பலவீனமான Hip flexors உங்கள் நடைபயிற்சி, நிலைத்தன்மை மற்றும் சமநிலையையும் பாதிக்கலாம். தரையில் அமர்வது இந்த இடுப்பு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
நீங்கள் தரையில் அமரும் போது, அதிக கீழ் உடல் தசைகள் தேவைப்படும். ப்ரிவெண்டிவ் கார்டியாலஜி ஜர்னலில் உள்ள ஆய்வின்படி, தரையிலிருந்து எழும் உங்கள் திறன் நீண்ட ஆயுளைக் கணிக்கும்.
நான் உங்களை நாற்காலிகளில் உட்காருமாறு கேட்கவில்லை, ஆனால் தினமும் குறைந்தது சில நிமிடங்களாவது தரையில் உட்காருவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்று டாக்டர் யனமந்த்ரா கூறினார்.
நியூட்ரிஷன் அமன் பூரி கூறுகையில், நமது பெரும்பாலான நேரம் இப்போது நாற்காலி அல்லது படுக்கைகளில் செலவிடப்படுகிறது. நாற்காலியில் அமர்வதை விட தரையில் அமர்ந்திருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் இது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை.
ஒருவர் தரையில் அமர்ந்து சாப்பிடவும், படிக்கவும், தரைப் பயிற்சிகளைச் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டும். நாற்காலியில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கீழ் முதுகில், குறிப்பாக இடுப்புப் பகுதியில் அழுத்தம் கொடுக்கும். தரையில் அமர்வதால் முதுகுவலி நீங்கும்.

தரையில் உட்காருவது உடலின் உறுதித்தன்மையை மேம்படுத்துகிறது, இடுப்பு தசைகளை வலுப்படுத்துகிறது என்று பூரி கூறினார்.
Kneeling மற்றும் squatting ‘ஆக்டிவ் ரெஸ்ட்’ தோரணைகள். வெறுமனே ஒரு நாற்காலியில் உட்காருவதை விட அவற்றுக்கு அதிக தசை செயல்பாடு தேவைப்படுகிறது.
இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்த உதவும் என்றும் பூரி கூறினார். தரையில் அமர்ந்து உணவு உண்பது எலும்புக்கூட்டை ஆதரிக்க உதவுகிறது, உடல் நிலை மற்றும் முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, முதுகுவலியைப் போக்குகிறது.
தட்டை தரையில் வைத்து சாப்பிடும் போது உடலை சற்று முன்னோக்கி கொண்டு வந்து, மீண்டும் அசல் நிலைக்குத் திரும்ப வேண்டும். இதை மீண்டும் செய்வதன் மூலம் வயிற்று தசைகள் தூண்டப்பட்டு, வயிற்றில் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரித்து, உணவை மிகவும் திறம்பட ஜீரணிக்க அனுமதிக்கிறது, என்று பூரி கூறினார்.
மனதில் கொள்ள வேண்டியவை
* நீங்கள் சம்மணங்கால் அல்லது கால்களை நீட்டி அல்லது எளிய சுகாசனத்தில் உட்காரலாம். நீங்கள் நேராக உட்கார முடிந்தால் நல்லது.
அடி முதுகில் அழுத்தம் ஏற்பட்டால், உங்கள் இடுப்புக்கு அடியில் ஒரு தலையணை அல்லது துண்டு போட்டுக் கொள்ளவும்.
நீங்கள் தரையில் அதிக நேரம் உட்கார்ந்தால் பொசிஷனை மாற்ற முயற்சிக்கவும். உங்கள் கால்களை ஸ்ட்ரெட்ச் செய்யலாம் என்று டாக்டர் யனமந்த்ரா தெளிவுபடுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“