காய்கறி வெட்டும் கத்தியை ஷார்ப் ஆக்குவது எப்படி? சரியான முறை இதுதான்!
காய்கறி வெட்டுவதற்கு என்ன மாதிரியான கத்தியைப் பயன்படுத்த வேண்டும், என்ன மாதிரியான கத்தியை வாங்கவே கூடாது, வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியை ஷார்ப் ஆக்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம் வாருங்கள்.
காய்கறி வெட்டுவதற்கு என்ன மாதிரியான கத்தியைப் பயன்படுத்த வேண்டும், என்ன மாதிரியான கத்தியை வாங்கவே கூடாது, வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியை ஷார்ப் ஆக்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம் வாருங்கள்.
எந்த கத்தி காய் கறி வெட்டுவதற்கு ஏற்றது, காய்கறி வெட்டும் கத்தியை ஷார்ப் ஆக்குவது எப்படி என்று சிவராமன் தனது யூடியூப் சேனலில் (SivaRaman Kitchen) கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம். Photograph: (SivaRaman Kitchen)
காய்கறி வெட்டுவதற்கு என்ன மாதிரியான கத்தியைப் பயன்படுத்த வேண்டும், என்ன மாதிரியான கத்தியை வாங்கவே கூடாது, வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியை ஷார்ப் ஆக்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம் வாருங்கள்.
Advertisment
வீட்டில் சமையலுக்கு காய் கறி வெட்டுதற்கு மார்க்கெட்டில் பல்வேறு விதமான கத்திகள் இருக்கின்றன. ஆனால், எந்த கத்தி காய் கறி வெட்டுவதற்கு ஏற்றது, காய்கறி வெட்டும் கத்தியை ஷார்ப் ஆக்குவது எப்படி என்று சிவராமன் தனது யூடியூப் சேனலில் (SivaRaman Kitchen) கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
காய் கறி வெட்டுவதற்கு அதிக ஹீல் உள்ள கத்தியை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், காய் கறி வெட்டும்போது கை வலிக்காது, கையை வெட்டிக்கொள்ள மாட்டீர்கள், காய் கறியை வேகமாக நறுக்கலாம்.
அதே நேரத்தில், உங்கள் வீட்டில் காய் கறி வெட்டும் மழுங்கிப் போனால், கத்தியை ஷார்ப் ஆக்க, ஹார்டுவேர் கடையில் ஒரு சாணைக் கல் வாங்கிக்கொள்ளுங்கள். அதை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவையுங்கள்.
Advertisment
Advertisements
பிறகு, சாணைக் கல்லை எடுத்து, கீழே ஒரு சிறிய துணியை விரித்து அதன் மீது வையுங்கள். அப்போதுதான் சாணைக் கல்லுக்கு பிடிப்பு கிடைக்கும். இப்போது, சாணைக் கல்லில் நீங்கள் ஷார்ப் ஆக்க வேண்டிய கத்தியை தேயுங்கள் ஒரு வீச்சில் ஒரு பக்கமாக தேயுங்கள். ஒரு வீச்சில் தேய்த்துவிட்டு எதிர்புறமாக மீண்டும் தேய்த்தால் மழுங்கிவிடும்.
கத்தியை அடுத்தப் பக்கம் திருப்பி தேய்க்கும்போது சாணைக் கல்லையையும் திருப்பிக் கொள்ள்ளுங்கள். இப்படி கத்தியை தீட்டும்போது சாணைக் கல் சீராக தேயும்.
அதே போல, காய் கறி வெட்டும் கத்தி லேசாக மழுங்கினால், பீங்கான் பாத்திரத்தில் அடிப்பகுதியில் வைத்து தேய்த்து தீட்டிக்கொள்ளுங்கள், கத்தி ஷார்ப் ஆகிவிடும்.
காய் கறி வெட்டுவதற்கு எந்த மாதிரி கத்தி பயன்படுத்தக் கூடாது என்றால் வெட்டும்பகுதி பல் போல கருக்கு அரிவால் போல இருந்தால் அது காய் கறி வெட்டுவதற்கு பயன்படுத்த வேண்டாம்” என்று சிவராமன் கூறுகிறார்.