/indian-express-tamil/media/media_files/2025/07/30/binni-krishnakumar-2025-07-30-16-00-15.jpg)
Binni krishnakumar
மாதவிடாய்... இது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு அங்கமாக இருக்கும் ஓர் இயற்கை நிகழ்வு. ஆனால், இது வெறும் உடல் சார்ந்த மாற்றம் மட்டுமல்ல, அதன் பின்னணியில் சமூக, பண்பாட்டு, மற்றும் உணர்வுப்பூர்வமான பல அடுக்குகளும் உள்ளன.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமூக நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கிவைக்கப்படும் "தீட்டு" என்ற கருத்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகெங்கும் பல்வேறு சமூகங்களில் நிலவிவரும் ஒரு பழக்கம். இது வெறும் சடங்கு மட்டுமல்ல, பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஒரு சமூகப் பிரச்சினை.
விஜய் டிவியில் பலரின் மனம் கவர்ந்த, திறமை வாய்ந்த நட்சத்திரம் சிவாங்கி. தனது துறுதுறுப்பான பேச்சினாலும், இனிமையான குரலினாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். சமீபத்தில், சிவாங்கியின் தாய், பிரபல பின்னணி பாடகி பின்னி கிருஷ்ணகுமார் ஒரு நேர்காணலில் பேசிய சில விஷயங்கள் பலரையும் யோசிக்க வைத்தன.
”கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் நானும் பிரியட்ஸ் டைம்ல தனியாத்தான் இருந்தேன். பெட்ல படுக்க விடமாட்டாங்க. ஏன்னா, அவங்க வீட்டுல பூஜைகள் எல்லாம் இருக்கும். அந்த நாலு நாள் நிச்சயமா மனசுக்கு கஷ்டமா இருக்கும். இப்போ கூட, "என் பொண்ணு (ஷிவாங்கி) இதையெல்லாம் ஃபேஸ் பண்ணக்கூடாது"ன்னு தோணும்.
சில சமயம், குக்கு வித் கோமாளி ஷூட்டிங் போறப்ப, சில நாட்கள்ல சுத்தமா எனர்ஜி இருக்காது. நான் சொல்லுவேன், "உனக்கு மட்டுதான் இது தெரியும். ரொம்ப எனர்ஜடிக்கா இரு. நல்ல சாப்பிடு!"ன்னு சொல்லுவேன். பிரேக் டைம்ல, கூட இருக்கிற ஒருத்தர் ஹாட் பேக் கொடுத்துட்டே இருப்பாங்க. டல்லா இருப்பா. அப்புறம், "ஷூட்டிங் ஓகே"ன்னு சொன்னதும் அதே எனர்ஜியோட பண்ணுவா. அப்படி எல்லாம் பண்ணியிருக்கா.
லேடீஸுக்கு இருக்கிற ஒரு பெரிய பிரச்சனை இது. எல்லோரும் இந்த ஒரு விஷயத்துல லேடீஸை மதிக்கணும். அவங்களை தள்ளி வெச்சு, தூரமா இருக்க வைக்கக்கூடாது. அவங்களுக்குள்ள ஒரு விஷயம் நடக்குது. அதனால, அதைப் புரிஞ்சிக்கிட்டு மதிக்கணும்", என்று பின்னி கிருஷ்ணகுமார் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.