ஷிவாங்கி வாங்கிய காரில் தியேட்டர்? இதுக்கு வடபழனியில் ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கிடலாம்!

நானும் ஏற்கெனவே BMW X1 வண்டியை ஓட்டிப் பார்த்திருக்கேன். எல்லாமே. இது புதுசு. என்னோட ட்ரீம் கார் BMW X3. அது ஷோரூம்ல இல்ல. பரவாயில்லை. இப்போதைக்கு நான் BMW 7 சீரிஸ்ல உட்கார்ந்திருக்கேன்.

நானும் ஏற்கெனவே BMW X1 வண்டியை ஓட்டிப் பார்த்திருக்கேன். எல்லாமே. இது புதுசு. என்னோட ட்ரீம் கார் BMW X3. அது ஷோரூம்ல இல்ல. பரவாயில்லை. இப்போதைக்கு நான் BMW 7 சீரிஸ்ல உட்கார்ந்திருக்கேன்.

author-image
WebDesk
New Update
Sivaangi New car

Sivaangi New car

ஒரு கனவு நனவாகும் தருணத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம். அதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான தருணத்தை சமீபத்தில் அனுபவித்தவர் தான் நம் அனைவருக்கும் பிடித்த ஷிவாங்கி. ஒரு கார் வாங்குவதென்பது பலருக்கும் வாழ்நாள் இலக்காகவே இருக்கும். ஷிவாங்கியின் விஷயத்திலும் அப்படித்தான். முதன்முதலாக ஒரு சொகுசு காரை வாங்கும் தன்னுடைய கனவு நிறைவேறிய அந்த அற்புத தருணத்தை, அவர் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

ஷிவாங்கி தனது பல நாள் கனவான BMW X3 காரை வாங்குவதற்காக அப்பாவுடன் அதன் ஷோரூமிற்கு செல்கிறார். அங்கிருக்கும் BMW கார்களின் விலை மற்றும் வசதிகளைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW X5 காரைப் பார்த்து வியக்கிறார். அதேபோல, ஷோரூமிலேயே ஒரு பெரிய திரையுடன் இருக்கும் BMW 7-Series-ஐயும் பார்க்கிறார். அந்தக் காரின் விலை 2.4 கோடி ரூபாய். 

Sivaangi New car 1

Advertisment
Advertisements

"நானும் ஏற்கெனவே BMW X1 வண்டியை ஓட்டிப் பார்த்திருக்கேன். எல்லாமே. இது புதுசு. என்னோட ட்ரீம் கார் BMW X3. அது ஷோரூம்ல இல்ல. பரவாயில்லை. இப்போதைக்கு நான் BMW 7 சீரிஸ்ல உட்கார்ந்திருக்கேன். இங்க ஒரு போன் மாதிரி ஸ்க்ரீன் வருது, கால் ஆட்டோமேட்டிக்கா ஃபிரீஸ் ஆகி, முன்னாடி போகுது. அதையும் தாண்டி, பின்னாடி ஒரு தியேட்டரே இருக்கு! நெட்ஃப்ளிக்ஸ், எல்லாமே வரும்! பிசினஸ் பண்றவங்க பின்னாடி உட்கார்ந்து வேலை எல்லாம் பார்க்கலாம். ஆனா இது நம்ம பட்ஜெட்ல இல்ல. இதுக்கு நான் வடபழனியில் ஒரு அப்பார்ட்மென்டே வாங்குவேன், என்று உற்சாகமாகக் கூறுகிறார் ஷிவாங்கி.

இறுதியாக ஒரு மெர்சிடிஸ் பென்ஸ்!

பல கார்களைப் பார்த்த பின்னர், இறுதியாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்க முடிவு செய்கிறார் ஷிவாங்கி. தனது முதல் காரை எடுக்க, அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினருடன் வெள்ளை நிற ஆடையில் பென்ஸ் ஷோரூம் செல்கிறார். அந்தக் காரின் விலையைக் கேட்டால் நிச்சயம் தலை சுற்றும். ஆம்! அதன் விலை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த காரில் உள்ள வசதிகள் மிகவும் பிரத்யேகமானவை. ஒரு ஆடம்பர காரில் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் இதில் இருக்கின்றன. 

”உலகத்திலேயே முதல் முறையாக, நான் பல வீடியோக்கள்ல பல விஷயங்கள் அன்பாக்ஸ் பண்ணியிருக்கேன். ஆனால் ஒரு காரையே அன்பாக்ஸ் பண்ணி, அதுவும் நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு போறது, வாழ்க்கையில ஒரு பெரிய சாதனை. என் குடும்பத்தினர் எல்லாம் என் கூட இருந்தாங்க. என் தாத்தா பாட்டி, அப்பா, அம்மா, என் குடும்பத்தினர் எல்லாம் இதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அவங்க இல்லாம நான் இதைக் கொண்டாட முடியல. 

நான் தான் ஓனர். என் கையை வச்சு முதல்முறையா காரை அன்பாக்ஸ் பண்ணப் போறேன். கனவுல கூட நினைச்சுப் பார்க்காத ஒரு கார் பிராண்டு, என் வீட்ல இருக்கு. நான் எப்போதும் என் மக்களை மறக்க மாட்டேன். நீங்க எல்லாரும் என் மேல நம்பிக்கை வச்சு, என்னைக் கைவிடாம ஆதரவு கொடுத்ததாலதான் இந்த வெற்றி என்னால அடைய முடிந்தது. அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. கடவுளுக்கும் நன்றி”, என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஷிவாங்கி. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: