சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே பாகனேரியில் 200 ஆண்டுகால பாரம்பரிய செவ்வாய்பொங்கல் நடைபெற்றது. இதில் 506 நகரத்தார் குடும்பத்தினர் ஒரே சமயத்தில் பொங்கல் வைத்தனர். பாகனேரியில் பிரசித்தி பெற்ற புல்வநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன், அப்பகுதி நகரத்தார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய செவ்வாய் பொங்கல் வைத்து வருகின்றனர். இந்த பொங்கல் விழா ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/f7e7e636-afe.jpg)
அதன்படி, நேற்று செவ்வாய் பொங்கல் நடைபெற்றது. இதற்காக சில வாரங்களுக்கு முன், திருமணம் முடித்த ஆண் வாரிசுகளின் குடும்பத்தினரை ஒரு புள்ளியாக கணக்கிட்டனர். மொத்தம் 506 புள்ளிகள் கணக்கிடப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்று கூடிய நகரத்தார், பொங்கல் வைக்க உள்ளோரின் வரிசையை தேர்வு செய்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/16908a6b-d32.jpg)
புள்ளிகளாக தேர்வானோரின் பெயர்களை சீட்டில் எழுதி பானையில் இட்டனர். பின்னர் குலுக்கல் முறையில் வரிசையை தேர்வு செய்தனர். இந்தாண்டு முதல் பானையில் பொங்கல் வைக்க ஆர்.எம் சேது ராமன் குடும்பத்தினர் தேர்வாகினர்.
/indian-express-tamil/media/post_attachments/cfe61c7c-128.jpg)
இந்நிலையில், நேற்று புல்வநாயகி அம்மன் கோயில் முன் கூடி, முதல் பானை தேர்வானோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 506 குடும்பத்தினரும் மாலை 4.31 மணிக்கு ஒரே சமயத்தில் பொங்கல் வைத்தனர். அனைவரும் பொங்கல் வைத்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோன்று நாட்டரசன் கண்ணுடைய நாயகி திருக்கோயில் முன்பாக 922 பொங்க பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான குடும்பத்தினர் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.