முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு சிவகங்கை கோகலேஹால் தெருவில் காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவப்படத்தை வரைந்து மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கையில் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, நகர் காங்கிரஸ் தலைவர் தி. விஜயகுமார் தலைமை வகித்தார். இதையொட்டி, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவத்தை ரங்கோலி மூலம் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் வரைந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2024/12/28/KNJKL5pdA3dMbcC89CVC.jpeg)
தொடர்ந்து நிர்வாகிகள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.இதில், மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஸ்ரீவித்யா கணபதி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, நகர்மன்ற உறுப்பினர் மகேஷ்குமார், முன்னாள் உறுப்பினர் மோகன்ராஜ், வட்டாரத் தலைவர் காளீஸ்வரி, சேவாதள மாவட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.