திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுவட்டார பகுதியில் கழுதை பால் விற்பனை செய்து வருகிறார் கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நினைத்து பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கழுதை பால் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. கழுதை பாலில் மருத்துவக் குணம் இருப்பதாக பொது மக்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். ஒரு சங்கு பால் ரூ 100 க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.2000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எருமை பால், ஆட்டு பால் போலவே கழுதைப் பாலும் நமது முன்னோர்கள் காலத்திலிருந்து குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுவதாக நம்பப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஏழு கழுதைகளை அழைத்துக் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதியில் கழுதை பால் விற்பனையை துவக்கி உள்ளார்.
வீதிகளில் கழுதை பால் கழுதை பால் என கூவி கூவி விற்பனை செய்து வருகிறார் கழுதை பால் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் வராது, .என்ற நம்பிக்கையில் பலரும் ஆர்வத்துடன் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“