/indian-express-tamil/media/media_files/1tMPm30yQU0PdT2gjKZV.jpg)
வயது முதிர்வு நம் உடல்நலத்தை பாதிப்பது போல், நம் கண் பார்வையையும் பாதிக்கும். கண் பார்வை சீராக இருந்தால், முதுமையிலும் நாம் சுதந்திரமாக செயல்படலாம். இந்நிலையில், கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மருத்துவர் நரேந்திர சிங் விவரித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Six effective tips to prevent your eyes from ageing
"அருகில் இருக்கும் பொருள்களை தெளிவாக காண்பதில் சிக்கல், பார்ப்பதில் தெளிவின்மை மற்றும் கண்ணாடி அணிந்து படிப்பதன் அவசியம் அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் கண்களில் பிரச்சனை ஏற்படுவதை கண்டறியலாம்" என மருத்துவர் நரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
"மேலும், கண்களை சுற்றிலும் சுருக்கம், குறைவான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் முதுமையின் காரணமாக ஏற்படலாம்" என கூறியுள்ளார்.
இது போன்ற பல்வேறு கண் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க 6 வழிமுறைகளை பின்பற்றலாம்:
1. சன்கிளாஸ் அணிதல்:
சன்கிளாஸ் அணிவதன் மூலம் புறஊதாக் கதிர்களிடமிருந்து கண்களை பாதுகாக்கலாம்.
2. மருந்துகள் பயன்படுத்துதல்:
கண்கள் ஈரப்பதம் இன்றி வறண்டு போவதை தவிர்க்க, மருத்துவரின் அறிவுறுத்தலின் படி, மருந்துகளை பயன்படுத்தலாம்.
3. ஆரோக்கியமான உணவு பழக்கம்:
வைட்டமின் ஏ, சி, இ, ஒமேகா, ஆன்டிஆக்சிடன்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. தேவையான அளவு தண்ணீர் குடித்தல்:
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடுப்பதால், உடல் மற்றும் கண் இரண்டுக்கும் நன்மை ஏற்படும். வறட்சி தன்மையை கட்டுப்படுத்தும்.
5. 20-20-20 விதிமுறையை பின்பற்றுதல்:
அதிக நேரம் கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள், ஒவ்வொரு 20 நிமிடமும் இடைவேளை எடுத்து, 20 அடி தூரம் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
6. கண் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல்:
சீரான இடைவெளியில் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பாதிப்புகள் இருந்தால் அவற்றை விரைவில் அறிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.