எட்டு வயது குழந்தை அனாமிகா ஆனந்த். இது அக்குழந்தையின் உண்மை பெயர் அல்ல. அனாமிகா, கடந்த காலங்களில் வலையொளியில் (யூ-ட்யூப்) தினமும் குறைந்தது 6 மணி நேரம் திகில் வீடியோவில் மூழ்கியிருந்தார்.
அவளுக்குள் பயம் ஏற்பட்ட நிலையில், பெற்றோருடன் பேசுவதை தவிர்த்தாள். தான் வைத்திருந்த பொம்மைகளுடன் பேச ஆரம்பித்தாள்.
அனாமிகாவின் தந்தை ஹரியானாவில் ஆயத்த ஆடைகள் நடத்திவருகிறார். தாயார் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
அனாமிகாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவரவே அவரை சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (PGIMER) மருத்துவமனையில் காண்பித்தனர்.
முன்னதாக கோவிட் பெருந்தொற்று லாக் டவுண் காலத்தில் அனாமிகாவுக்கு வயது 6தான். அப்போதுதான் பள்ளி ஆன்லைனில் செயல்படத் தொடங்கியது.
இக்காலக்கட்டத்தில் தனது தாயாரின் செல்போனையும் அனாமிகா பயன்படுத்தத் தொடங்கினார். அப்போது, வலையொளியில் மூழ்கிய அனாமிகா பேய்களின் உலகம் உள்ளிட்ட அமானுஷ்ய காட்சிகளை பார்ப்பதில் இறங்கிவிட்டார். இது கிட்டத்தட்ட தினமும் 6 மணி நேரம் வீதம் இரண்டு ஆண்டுகள் நடந்துள்ளது.
இதற்கு அவளது பெற்றோர் அவளை ஒழுங்காக பார்த்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தத் தனிமை அவளை அங்கு கொண்டு சேர்த்தது.
மேலும் அனாமிகாவால் போதுமான அளவு தூங்க முடியவில்லை. இதனால் அவரால் பள்ளியில் கவனம் செலுத்த முடியவில்லை. பாடத் திட்டங்களில் சிவப்பு கோடுகளை பெற்றாள்.
நண்பர்களுடன் பேசுவதை தவிர்த்தாள். அதேநேரம் பொம்மைகள் உடன் பேசினார். தனக்குள்ளும் முணுமுணுக்கத் தொடங்கினாள்.
இதனால் பயந்துப் போன அவளது பெற்றோர், முதலில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்பட பல்வேறு சிகிச்சைகளை பார்த்தனர். எனினும் முன்னேற்றம் இல்லை.
ஒரு கட்டத்தில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகத் தொடங்கினர். இதையடுத்து, உளவியல் துறையின் உதவிப் பேராசிரியை டாக்டர் நிதி சௌஹான், அனாமிகா மட்டுமின்றி அவளது பெற்றோரையும் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அனாமிகா குறிப்பிட்ட மணி நேரங்களில் வலையொளியில் மூழ்கியிருப்பது கண்டறியப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
அதன்பின்னர் அனாமிகா வாழ்வில் மாற்றம் தென்பட ஆரம்பித்தது. புன்னகை திரும்பியது. இது குறித்து பேசிய டாக்டர் சௌஹான், தொற்றுநோய்க்குப் பிறகு கேமிங் மற்றும் சமூக ஊடக போதைக்கு குழந்தைகள் ஆளாகியுள்ளனர்.
பாதிப்புகளும் 1000-ல் இருந்து 1500 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக பாதிக்கப்படுவது 11-15 வரையிலான குழந்தைகள் ஆகும்.
இது பற்றி விரிவான ஆய்வுக் கட்டுரையையும் மருத்துவர் சௌஹான் எழுதியுள்ளார். அதில், கேமிங் மற்றும் சமூக வலைதளங்கள் எவ்வாறு பாதிக்கின்றன” என்பது பற்றி கூறியுள்ளார்.
பெற்றோர்கள் எவ்வளவுதான் வேலையில் மூழ்கியிருந்தாலும் குழந்தைகளின் ஆன்லைன் கேமிங் மற்றும் ஆன்லைன் தரவுகளை எளிதில் அணுகும் வகையில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.
சரியான தூக்கம், பொழுதுப் போக்கு, நண்பர்களுடன் பேசுதல், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் ஆகியவை அவசியமானதாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/