சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் குமார் மற்றும் நீலாம்பரி தம்பதியரின் மகள் நிவிஷா ஸ்ரீ. 5 வயதான சிறுமி அதே பகுதியில் யூ.கே.ஜி. வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில்இவர் ஹூலா ஹூப் எனும் வளையம் சுற்றுதலில் ஸ்கேட் போர்டில் நின்றபடி குறைந்த நேரத்தில் அதிக முறை சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சேது சத்சங்க அரங்கத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் சிறுமி நிவிஷா ஸ்கேட் போர்டில் மீது தொடர்ந்து நான்கு நிமிடம் 23 விநாடிகள் நின்றபடி 463 முறை ஹூலா ஹூப் இடுப்பில் சுழற்றி அசத்தினார்.
சக்கரங்கள் பொருத்திய அசைந்து கொண்டே இருக்கும் ஸ்கேட் போர்டு மீது நின்று சிறுமி செய்த சாதனையை பார்வையாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
நிவிஷாவின் இந்த சாதனையை கண்காணித்த இராபா உலக சாதனை புத்தகத்தின் ஆசிரியர் பிரசன்னா ராமானுஜம், சாதனை சிறுமிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
சிறுமி நிவிஷா அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட் போர்டு போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடதக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“