சரும ஆரோக்கியம் தான் முக்கியம் என்றாலும், பலரும் தங்கள் சரும நிறத்தை மேம்படுத்தவே விரும்புகிறார்கள். இதற்காகப் பலரும் கண்ட கண்ட கிரீம்களைப் பயன்படுத்தி பக்க விளைவுகளைச் சந்திக்கிறார்கள். ஆனால், இயற்கையான முறையில், எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல், உங்கள் சரும நிறத்தை நிரந்தரமாக மேம்படுத்த ஒரு அருமையான வீட்டு வைத்தியம் உள்ளது. இது டாக்டர் தீபா அருளாளன் பாட்டியின் பாரம்பரிய அறிவிலிருந்து வந்த குறிப்பு!
Advertisment
தேவையான பொருட்கள்:
கசகசா- 100 கிராம் பாதாம் பருப்பு (தோலுடன்)- 100 கிராம்
Advertisment
Advertisements
செய்முறை:
முதலில் கசகசாவை நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், காயவைத்த கசகசாவையும், தோலுடன் இருக்கும் பாதாம் பருப்பையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைக்கும்போது மிக்ஸி சூடானால், சிறிது நேரம் நிறுத்திவிட்டு மீண்டும் அரைக்கவும். பாதாமில் இருந்து எண்ணெய் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம்.
அரைத்த பொடியை ஒரு சல்லடையில் சலித்து, மிகவும் மெல்லிய பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களது முக்கிய ஃபேஸ் பேக் பொடி!
ஸ்க்ரப்: சலித்த பிறகு மீதமிருக்கும் சற்று பெரிய துகள்களை வீசிவிட வேண்டாம். இதை நீங்கள் ஒரு சிறந்த ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை (பேக்):
தினமும் இரவு தூங்குவதற்கு முன் இதைச் செய்யலாம். இரண்டு டீஸ்பூன் பொடியை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு பச்சை பால் சேர்த்து, கெட்டியான பேஸ்ட்டாக கலந்து மூடி வைக்கவும் மறுநாள் காலை, இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து, காதுகள் என எல்லா இடங்களிலும் தடவவும். கண்களைச் சுற்றி மட்டும் தேங்காய் எண்ணெய் சிறிது தடவிக் கொள்ளவும்.அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.
அரை மணி நேரம் கழித்து, கைகளில் சிறிது தண்ணீரைத் தொட்டு, முகத்தில் மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். கழுவிய பின், சிறிது கற்றாழை ஜெல்லை (Aloe Vera Gel) தடவவும். இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும்.
பயன்படுத்தும் முறை (ஸ்க்ரப்):
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை, பேக் போடுவதற்கு முன் ஸ்க்ரப் செய்யலாம். நாம் தனியாக எடுத்து வைத்திருந்த சற்று பெரிய துகள்களை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து, முகத்தில் மெதுவாக ஸ்க்ரப் செய்யவும். ஒரு நிமிடம் ஸ்க்ரப் செய்து, ஒரு நிமிடம் ஓய்வெடுத்து, மீண்டும் ஒரு நிமிடம் ஸ்க்ரப் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி, கற்றாழை ஜெல் தடவவும்.
இந்த ஸ்க்ரப் இறந்த செல்களை நீக்கி, பிளாக்ஹெட்ஸ் (blackheads) மற்றும் ஒயிட்ஹெட்ஸ் (whiteheads) போன்றவற்றை அகற்ற உதவும்.
பலன்கள்:
இந்த முறையைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, உங்கள் சரும நிறத்தில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஒரு சில மாதங்களிலேயே குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்பார்க்கலாம். சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த எளிய வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றி, இயற்கையான பொலிவைப் பெறுங்கள்!