ஹைட்ரேட்டிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் ஃபேஸ் கிரீம் இல்லாமல் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கம் எப்போதும் முழுமையடையாது. நீங்கள் மாய்ஸ்சரைசிங் க்ளோ பெற கற்றாழை மற்றும் குங்குமப்பூ ஃபேஸ் க்ரீம் ரெசிபி இங்கே உள்ளது.
ஆனால் நீங்கள் தீர்வுக்குள் செல்வதற்கு முன், தோல் பராமரிப்பு என்பது தூக்கம், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி பழக்க வழக்கங்களின் ஒரு முழுமையான நடைமுறை என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
இதை எப்படி செய்வது?
புதிய, இயற்கையான குங்குமப்பூ இழைகளை சூடான நீரில் சேர்க்கவும்.
அவற்றை ஆற விடவும், இப்போது ஒரு சுத்தமான கிண்ணத்தில், 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்த்து நன்கு கலக்கவும்.
குங்குமப்பூ கலந்த தண்ணீரை 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் படிப்படியாக சேர்த்து, மென்மையான மற்றும் கிரீமி கன்சிஸ்டன்ஸி வரும் வரை கலக்கவும். இதை ஓரு ஏர் டைட் கன்டெய்னரில் சேமித்து பயன்படுத்தலாம்.
நீங்கள் இயற்கையான பளபளப்பான நிறத்தை அடைய விரும்பினால், இரவில் இந்த கிரீம் தடவவும். அது உங்கள் சருமத்தில் ஊடுருவும். இது நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள், தொல்லை தரும் கரும்புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கிறது. வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகிறது.
இதை உங்கள் ஃபிரிட்ஜில் 2 வாரங்கள் வரை சேமித்து பயன்படுத்தலாம்.
தோல் பராமரிப்பு முடிவுகள் பெரும்பாலும் நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு குறிப்பிட்ட தோல் நிலைமைகள் இருந்தால், தனிப்பட்ட ஆலோசனைக்கு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“