Advertisment

உங்க முகம், கூந்தலுக்கு கற்றாழை பயன்படுத்த சரியான வழி எது?

கற்றாழை தோல் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் புதிய கற்றாழை இலையைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி உங்களுக்குத் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Aloe vera gel

How to use fresh aloe vera

கற்றாழை தோல் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் புதிய கற்றாழை இலையைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி உங்களுக்குத் தெரியுமா?

Advertisment

கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன, இது முடி இழைகளை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இருப்பினும், புதிய கற்றாழை இலையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பலருக்குத் தெரியாது.

கற்றாழை இலையைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி குறித்து நாங்கள் நிபுணரிடம் பேசினோம்.

என்ன செய்ய வேண்டும்?

Skin aloe vera

கற்றாழை இலையை செடியில் இருந்து வெட்டவும்.

அதை கீறியவுடன், அதிலிருந்து மஞ்சள் பால் (yellow latex) வெளியேறட்டும்.

லேடெக்ஸ் ஒருவரின் தோலுக்குப் பொருந்தாத ஆந்த்ராக்வினோன் (anthraquinones) எனப்படும் சேர்மங்கள் இருப்பதால் தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எனவே, கற்றாழை இலையை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊறவைத்து, இலையிலிருந்து லேடெக்ஸ் பிரிக்கப்பட வேண்டும்.

தண்ணீரின் நிறம் மாறி மஞ்சள் நிறமாக மாறியதும், நீங்கள் பயன்படுத்துவது நல்லது, என்று டாக்டர் ஷரீஃபா சாஸ் கூறினார். (dermatologist and cosmetologist, Shareefa’s Skin Care Clinic)

ஜெல்லை பிரித்தெடுக்கும் முன் இலையை நன்கு கழுவ வேண்டும்.

இது மேற்பரப்பில் இருக்கும் அழுக்கு அல்லது அசுத்தங்களை அகற்ற உதவுகிறது. பின்னர், இலையிலிருந்து ஜெல்லை எடுத்து கன்டெய்னரில் சேமிக்கவும். இதை ஃபிரிட்ஜில் 7-10 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தலாம்.

கற்றாழை உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும், ஏனெனில் இது முகப்பருவை சரிசெய்யவும், ரேஷஸ் குணப்படுத்தவும், ஒட்டுமொத்த தோலின் தோற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதேபோல், இது உங்கள் தலைமுடிக்கு ஒரு வரப்பிரசாதமாகும், எனவே ஜெல்லை பிரித்தெடுத்து, அதிகபட்ச நன்மைகளுக்கு சரியான வழியில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Read in English: How to use fresh aloe vera

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment