இந்தியாவில் அழகு பராமரிப்பும், ஆயுர்வேதமும் எப்போதும் இணைந்து இருக்கின்றன. சந்தையில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலர் பழமையான வீட்டு வைத்தியத்தை தான் விரும்புகிறோம்.
இங்கு ஓஹ்ரியா ஆயுர்வேதத்தின் நிறுவனர் ரஜனி ஓஹ்ரி, உங்கள் தோல் வகைக்கு மிகவும் பொருத்தமான ஆயுர்வேத ஃபேஸ் வாஷ் ரெசிபியை பகிர்ந்துள்ளார். இது உங்கள் முகத்தில் உள்ள துளைகளில் உள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் அசுத்தங்கள் அனைத்தையும் வெளியேற்ற உதவும்.
எண்ணெய் சருமத்திற்கு
முல்தானி மட்டி, அதிமதுரம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றைக் கலக்கவும். இந்த கலவையானது அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்த உதவுகிறது, அழுக்குகளை நீக்குகிறது, pH சமநிலையை பராமரிக்கிறது மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.
காம்பினேஷன் சருமத்திற்கு
முகத்தின் எண்ணெய் மற்றும் வறண்ட பகுதிகள் இரண்டையும் சுத்தப்படுத்தி சமநிலைப்படுத்த கொண்டைக்கடலை மாவை தயிருடன் கலக்கவும். இந்த கலவை சருமத்தை சுத்தப்படுத்துகிறது, எக்ஸ்ஃபாலியேட் செய்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது, இது வெவ்வேறு தோல் பகுதிகளுக்கு சமநிலையை வழங்குகிறது
வறண்ட சருமத்திற்கு
ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கும் சுத்திகரிப்புக்காக, பிசைந்த வாழைப்பழத்தை தேனுடன் சேர்த்து கலக்கவும். இது ஆழமான நீரேற்றம், ஊட்டச்சத்து மற்றும் சருமத்தை மென்மையாக்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“