அசெலிக் ஆசிட் மற்ற தோல் பராமரிப்பு பொருட்களைப் போல பிரபலமாக இல்லை, ஆனால் இது உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் ஒரு இடத்தைப் பெறத் தகுதியானது.
முன்னணி பிரபல தோல் மருத்துவர் பட்டுல் படேலின் கூற்றுப்படி, அசெலிக் ஆசிட் (Azelaic acid) டைகார்பாக்சிலிக் அமிலங்கள் எனப்படும் சேர்மங்களின் குழுவிற்கு சொந்தமானது. இது ஈஸ்ட் மலாசீசியா ஃபர்ஃபரின் வளர்சிதை மாற்றத்தின் இயற்கையாக நிகழும் ஒரு தயாரிப்பு ஆகும். இது கோதுமை, கம்பு மற்றும் பார்லி போன்ற தானியங்களிலும் காணப்படுகிறது.
அதன் நன்மைகளைப் பொறுத்தவரை, பல உள்ளன:
*இது அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது, எனவே இது ரோசாசியாவை (rosacea) ஆற்ற உதவுகிறது
*இது உங்கள் தோலில் உள்ள முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருவை குறைக்கிறது
*இது சருமத்தை அமைதிப்படுத்தும் விளைவுகளைக் கொண்டுள்ளது, இது சிவப்பைக் குறைக்கிறது
*இது மெலனின் தொகுப்பை ஏற்படுத்தும்m டைரோசினேஸ் (tyrosinase) என்ற நொதியைத் தடுக்கிறது, இதன் மூலம் பிக்மென்டேஷனை குறைக்கிறது
*இது ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்பட்டு சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.
இதை பற்றி பேசிய உலக தோல் மருத்துவ நிபுணரான டாக்டர் ரஷ்மி ஷெட்டி, இது சக்திவாய்ந்த சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளையும் கொண்டுள்ளது; எனவே, வயதாகும்போது சருமம் கருமையாகிவிடும் என்பதால், ஆன்டிஏஜிங் சிகிச்சையில் இதைப் பயன்படுத்தலாம். இது தவிர, அசெலிக் அமிலம் பாக்டீரியோஸ்டாடிக் பண்புகளையும் கொண்டுள்ளது மற்றும் செல் ஒழுங்குமுறையை ஊக்குவிக்கிறது, இது முகப்பரு வடுவைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும்.
அசெலிக் ஆசிட் யார் தவிர்க்க வேண்டும்?

அசெலிக் ஆசிட் அனைத்து தோல் வகைகளுக்கும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது இயற்கையாகவே கிடைக்கிறது. இருப்பினும், டாக்டர் ஷெட்டியின் கூற்றுப்படி, நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் பட்சத்தில் அல்லது கர்ப்பமாக இருந்தால், ஒரு நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
இதே வழியில், டாக்டர் படேல் மேலும் கூறுகையில், உங்களுக்கு அஸெலிக் அமிலம் அல்லது ப்ரோபிலீன் கிளைகோல் ஒவ்வாமை இருந்தால் அதைப் பயன்படுத்தக் கூடாது. கூடுதலாக, உங்களுக்கு அரிக்கும் தோலழற்சி இருந்தால், சில சந்தர்ப்பங்களில், அது சருமத்தை எரிச்சலடையச் செய்து, லேசான தோல் அழற்சிக்கு வழிவகுக்கும், மேலும் இது ஆஸ்துமாவின் அறிகுறிகளையும் மோசமாக்கலாம்.
டாக்டர் பட்டேலின் கூற்றுப்படி, அசெலிக் ஆசிட் பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே:
*அசெலிக் ஆசிட் ஃபோம், கிரீம் மற்றும் ஜெல் வடிவங்களில் கிடைக்கிறது.
*இதை இரவில் ஒரு முறை முகத்தை நன்கு கழுவிய பிறகு தடவலாம், ஆனால் முதுகு போன்ற உடலின் பகுதிகளில் இருக்கும் பருவுக்கு பயன்படுத்தினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
*அசெலிக் ஆசிட் பயன்படுத்தும் போது அஸ்ட்ரிஜென்ட் அல்லது டீப் க்ளென்சிங் வாஷ்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், தொடர்ந்து சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும்.
*சிவத்தலை கட்டுப்படுத்த ரோசாசியாவுக்கு பயன்படுத்தினால், அதை மாய்ஸ்சரைசருடன் அல்லது சிறிது காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும் நிபுணர்கள் தங்கள் அன்றாட வழக்கத்தில் மூலப்பொருளைச் சேர்ப்பதற்கு முன் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்ய பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் இது சருமத்தில் கூச்ச உணர்வு அல்லது எரிச்சல், அரிப்பு, பயன்படுத்தப்பட்ட இடத்தில் தோல் உரிதல், வறட்சி அல்லது சிவத்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“