Skin care, Skin care coconut water, coconut water nutrition, halo elaneer, coconut water, இளநீர், இளநீர் மருத்துவ பயன்கள்
Skin care with coconut water: இளநீர், கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தருகிற பானம் மட்டுமே என்கிற எண்ணம் இருந்தால், அதை தூக்கி எறியுங்கள். வெளிய சொல்ல மாட்டாங்க... பலரோட இளமையின் ரகசியம் இதுதாங்க!
Advertisment
ஒருவருடைய உணவுப் பழக்கம், உணவு விருப்பத்தேர்வுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான மாற்றங்களை செய்வது மற்றும் ஒருவருடைய ஆரோக்கியத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து மக்கள் தற்போதைய ஆரோக்கிய நெருக்கடி காலத்தில் உணர தொடங்கியுள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று, தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் அறியப்பட்ட வயதான பழமையான பாரம்பரிய பானங்களை உண்ணுவது. தேங்காய் தண்ணீரின் நன்மைகள் குறித்து நமக்கு புரியவைப்பது ஊட்டச்சத்து நிபுணர் Nmami Agarwal.
Skin care nature drinks: இளநீர் மருத்துவ பயன்கள்
கோடை வெப்பத்தை தணிக்க மற்றும் ஆரோக்கிய தொல்லைகளை விரட்ட தேங்காய் தண்ணீர் ஏன் சிறந்ததென்று அவர் Instagram சமீபத்தில் கூறியுள்ளார்.
* தேங்காய் தண்ணீர் கோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த பானங்களில் ஒன்றாகும், மேலும் உடனடி ஆற்றலுக்கான ஊக்கமாகவும் சக்திவாய்ந்த இயற்கை விளையாட்டு பானமாகவும் இது செயல்படுகிறது
* கடினமான வேர்க விருவிருக்க செய்யும் உடற்பயிற்சிக்கு பிறகு rehydrate செய்வதற்கான ஒரு சிறந்த வழி தேங்காய் தண்ணீர் அருந்துவது.
* சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது வேறு synthetic பொருட்கள் சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவதை மாற்றி ஒரு பாரம்பரிய விளையாட்டு பானமான தேங்காய் தண்ணீரை அருந்தலாம்.
* இதில் குறைவான கலோரிகள் உள்ளன் மேலும் இது வயிற்றுக்கு கெடுதல் செய்வதில்லை.
* pigmentation குறைக்க, முகப்பரு மற்றும் வறண்ட சருமத்திற்கு நல்லது
* தேங்காய் தண்ணீர் அருந்துவது hangover க்கான சிறந்த சிகிச்சை. ஆல்கஹால் dehydration ஐ ஏற்படுத்தும் இதன் காரணமாக தலைவலி மற்றும் குமட்டல் மறுநாள் காலையில் ஏற்படும். தேங்காய் தண்ணீர் இரண்டையும் போக்க உதவும் மேலும் இது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்க உதவும்.
பட்டியலிடப்பட்டவைகள் தவிர தேங்காய் தண்ணீர் வயது முதிர்வுக்கு எதிராக செயல்படும் ஒரு சக்திவாய்ந்த பானமாக கருதப்படுகிறது. Medical News Today இதழில் வந்த ஒரு செய்தியின்படி தாவரங்களில் காணப்படும் cytokinins தேங்காய் தண்ணீரிலும் உள்ளது. அவற்றின் சேர்மங்கள் பொதுவாக வயது முதிர்வுக்கு எதிரானவை என கருதப்படுகிறது
எலும்புகளைப் பாதுகாக்க உதவும் கால்சியம் மிகுதியாக அடங்கியுள்ள பொருளாகவும் தேங்காய் தண்ணீர் அறியப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil