ஆரோக்கியமான, அழகான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு உறுதியளிக்கும் பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனாலும் தோல் பராமரிப்பு என்று வரும்போது, ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. சில சமயங்களில் ஃபுரூட் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே’ பார்லர்களில் நிறைய பணத்தை செலவிடுகிறோம்.
ரசாயனம் இல்லாத மேக்-ஓவருக்கு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம்.
தக்காளி
தக்காளி சருமத்தை நிறமாக்கவும், இறுக்கமாகவும், பருக்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
ஒரு பழுத்த தக்காளியில் இருந்து 2 டீஸ்பூன் சாற்றை பிழிந்து, அதனுடன் 3 டீஸ்பூன் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை முகம், கழுத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு கழுவவும்.
பப்பாளி
இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் உடனடி முடிவுகளைக் காட்டுவதாக நம்பப்படுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் பப்பேன் என்ற என்சைம் உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.
பழுத்த பப்பாளியை பிசைந்து தோலில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும். இது உடனடிப் பொலிவைத் தரும். உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் தவிர்க்கவும்.
டேனிங் நீங்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கரும்புள்ளிகள் மற்றும் டேன் போன்றவற்றால் சருமம் சோர்வாக இருந்தால் இதை முயற்சிக்கவும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.
எப்படி செய்வது?
வாழைப்பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நீங்கள் முகப்பரு மற்றும் பிக்மென்டேஷன் போன்ற தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் சிறிது தேன் சேர்க்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
வெள்ளரி
வெள்ளரி சருமத்தை குளிர்ச்சியாக்கும், இது வறண்ட சருமத்திற்கு சிறந்தது.
வெள்ளரிக்காயை அரைத்து சாற்றை முகத்தில் தடவவும். நீங்கள் கூழை ஃபிரிட்ஜில் வைத்து அது குளிர்ந்தவுடன், கருவளையங்களுக்கு சிகிச்சையளிக்க ஐ மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.
அடுத்தமுறை பியூட்டி பார்லர் போக தேவையில்லை.. அதுக்கு பதிலா பளபளப்பான சருமத்துக்கு இந்த ஃபேஸ் பேக்குகளை கண்டிப்பா டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“