மீந்து போன சப்பாத்திக்கும் முக அழகுக்கும் என்ன சம்பந்தம்? இதை ட்ரை பண்ணுங்க!
Skin Care: மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு சருமத்தில் உள்ள சிறு துளைகளில் உள்ள அழுக்கை போக்கும். ரோஸ் வாட்டர் சருமத்தை நன்றாக டோன் (tone) செய்யும்.
Skin Care: மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு சருமத்தில் உள்ள சிறு துளைகளில் உள்ள அழுக்கை போக்கும். ரோஸ் வாட்டர் சருமத்தை நன்றாக டோன் (tone) செய்யும்.
skin care, dry skin, chapati, skin care tips, dry skin home remedy, dry skin face pack, dry skin during summer homemade face pack remedy, indian express news
Skin Care Tips: கோடை காலத்தில் வறண்ட சருமத்தினால் வரும் பெரிய பிரச்சனை அது மேலும் வரண்டு விடுவதுதான். அதிக நேரம் குளிர்சாதன அறையில் செலவழிப்பது போன்ற பல காரணங்கள் இதற்கு இருந்தாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் மிக முக்கிய காரணம். எனவே தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். அதோடு இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான முகப்பூச்சை செய்துகொண்டால் சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். இதற்கு தேவையான பொருள் பற்றிச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Advertisment
* நேற்று இரவு சாப்பிட்டது போக மீதமுள்ள சப்பாத்தியை நன்றாக பொடி செய்துக் கொள்ளுங்கள். அதோடு ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் malai (பாலை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை ஆற வைத்து அதிலிருந்து எடுக்கப்படும் க்ரீம்) மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்யுங்கள்.
10 நிமிடம் கழிந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். உடனடியாக நீங்கள் தினமும் பயன்படுத்தும் moisturiser ஐ பூசிக் கொள்ளுங்கள்.
மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு சருமத்தில் உள்ள சிறு துளைகளில் உள்ள அழுக்கை போக்கும். ரோஸ் வாட்டர் சருமத்தை நன்றாக டோன் (tone) செய்யும். சப்பாத்தி பொடி ஒரு இயற்கையான exfoliant ஆக செயல்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil