கோடை என்றால் இரண்டு விஷயங்களே பிரிக்க முடியாது. ஒன்று தித்திக்கும் மாம்பழம் மற்றொன்று கொளுத்தும் வெயில். ஆனால், நீங்கள் சாப்பிட்ட பின்பு தூக்கி எறியும் மாங்கொட்டை, இந்த கோடை வெயிலில் உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்ள உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா?
செஃப் சினேகா சிங் உபாதயா இன்ஸ்டா வீடியோவில் பகிர்ந்துள்ள மேங்கோ சீட் பாடி பட்டர் பற்றி மேலும் அறிய நாங்கள் முடிவு செய்தோம்.
”இது ஒரு நம்பமுடியாத பாடி பட்டர், இது ஊட்டமளிக்கிறது. மேலும் தொடர்ச்சியான பயன்பாடு உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும். மாங்கொட்டையில் இருக்கும் சதைப் பகுதியை எடுக்க சிறிது நேரமும் முயற்சியும் தேவை, எனவே கொட்டையிலிருந்து அவற்றை அகற்றும்போது பொறுமையாகவும் கவனமாகவும் இருக்கவும்”, என்று செஃப் சினேகா அந்த வீடியோவில் கூறினார்.
எப்படி செய்வது?
2 – மாங்கொட்டை
1/4 கப் – வெர்ஜின் கோகனட் ஆயில்
மாங்கொட்டையில் இருந்து சதைப்பற்றை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். இதை தேங்காய் எண்ணெயுடன் ஒரு கடாயில் சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
இதை வடிகட்டி ஃபிரிட்ஜில் குளிர வைக்கவும்.
நீங்கள் அதை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது பாடி பட்டர் போன்ற கன்சிஸ்டன்ஸிக்கு விப் செய்யலாம். இது ஃபிரிட்ஜில் வைக்கப்பட வேண்டும், இல்லையெனில் தேங்காய் எண்ணெய், அறை வெப்பநிலையில் உருகும்.
தேங்காய் எண்ணெய் காமெடோஜெனிக், அனைவருக்கும் பொருந்தாது என்பதால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு அனைவரும் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும், என்று சினேகா பகிர்ந்து கொண்டார்.
சென்சிட்டிவ் சருமம் கொண்ட நபர்களுக்கு, மேங்கோ சீட் பட்டர் லேசான அமைப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பலன்களை வழங்குகிறது. இது முகம் மற்றும் உடல் இரண்டிற்கும் சிறந்த ஈரப்பதத்தை அளிக்கும் என்று தலைமை உணவியல் நிபுணர் லீனா மார்ட்டின் (chief dietician, Holy Family Hospital, Bandra) பகிர்ந்து கொண்டார்.
மேங்கோ சீட் பட்டர் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும், இது சருமத்திற்கு ஆழமான நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குகிறது, என்று டாக்டர் ஜதின் மிட்டல் கூறினார். (co-founder, cosmetologist and skin expert from Abhivrit Aesthetics)
வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த இந்த பாடி பட்டர், எந்தவொரு தோல் பராமரிப்பு வழக்கத்திற்கும் மதிப்புமிக்க கூடுதலாக உதவுகிறது, இது சரும ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் பராமரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன, அவை சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
/indian-express-tamil/media/media_files/cWZFI32hTin8wRAR2KUl.jpg)
மேங்கோ சீட் பட்டரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க உதவும், இளமை தோற்றத்தை ஊக்குவிக்கும்.
மற்ற பட்டர் போலல்லாமல், மேங்கோ சீட் பட்டர் லைட்வெயிட் மற்றும் கிரீஸி இல்லாதது, இது அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக ஆக்குகிறது. இது தோல் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை மேம்படுத்த உதவுகிறது, இது ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் குறைக்கவும், ஆரோக்கியமான ஸ்கின் டோன் பராமரிக்கவும் உதவுகிறது.
இருப்பினும், சாத்தியமான ஒவ்வாமை எதிர்விளைவுகளை நிராகரிக்க முன்கூட்டியே ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது முக்கியம், என்று மிட்டல் கூறினார்.
Read in English: Make this DIY body butter with mango kernels
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“