இளமையான, ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை விரும்பாதவர்கள் யார்தான் இல்லை.
ஆனால் நாம் அடிக்கடி உணராதது என்னவென்றால், ஆரோக்கியமான சருமத்தை அடைவதில் பல தோல் பராமரிப்பு தவறுகளை நாம் செய்கிறோம், மேலும் நமக்கு நல்லதை விட தீங்கு விளைவிக்கிறோம்.
தோல் மருத்துவர் காவேரி கர்ஹடே, தோல் பராமரிப்பு தொடர்பாக நாம் செய்யும் பொதுவான தவறுகள் குறித்து இங்கு பகிர்ந்துள்ளார்.
அதிகமாக பயன்படுத்துதல்
அதிகப்படியான ஸ்கின் கேர் பிராடக்ட்ஸ் பயன்படுத்துவது சில நேரங்களில் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும், என்று டாக்டர் கர்ஹடே கூறினார்.
பலவிதமான பொருட்களைக் கொண்டு உங்கள் சருமத்தை ஓவர்லோட் செய்வது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது உங்கள் சருமத் தடையை சீர்குலைக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/4FgRMa8POAF07q0hCPbP.jpg)
தோல் மென்மையானது, அதிகப்படியான பயன்பாடு அதன் சமநிலையை சீர்குலைத்து, எரிச்சல், வீக்கம் அல்லது பிரேக்அவுட்களை ஏற்படுத்துகிறது. ஒரு எளிமையான வழக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லது இன்னும் சிறந்தது என்று ஆராய்ச்சி காட்டுகிறது, என்று அவர் விளக்குகிறார்.
கழுத்து மற்றும் மார்பைப் புறக்கணித்தல்
பலர் சருமத்தை பராமரிக்கும் போது முகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி கழுத்தையும் மார்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறார்கள்.
உங்கள் முகத்த்தை போலவே இந்தப் பகுதிகளும் முதுமை மற்றும் சூரிய ஒளி பாதிப்புக்கு ஆளாகின்றன, இதனால் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுகின்றன, என்று டாக்டர் கர்ஹடே குறிப்பிடுகிறார்.
க்ளென்சிங், மாய்ஸ்சரைசிங் மற்றும் சன்ஸ்கிரீன் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், கழுத்து மற்றும் மார்பைப் பாதுகாப்பது ஏஜ் ஸ்பாட்ஸ், சீரற்ற தோல் மற்றும் முன்கூட்டிய சுருக்கங்களை குறைக்கிறது.
மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன் கலக்க வேண்டாம்
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Sunscreen-feature-image-getty-thinkstock.jpg)
மாய்ஸ்சரைசரை, சன்ஸ்கிரீன் உடன் ஒருபோதும் கலக்காதீர்கள், ஏனெனில் இது உங்கள் சன்ஸ்கிரீனின் செயல்திறனையும் சூரிய ஒளியில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் திறனையும் குறைக்கும். சன்ஸ்கிரீனுக்கு புற ஊதா கதிர்களுக்கு எதிராக பாதுகாக்க செயலில் உள்ள பொருட்களின் குறிப்பிட்ட செறிவு தேவைப்படுகிறது, இது மாய்ஸ்சரைசருடன் கலக்கும்போது குறைக்கப்படலாம், என்கிறார் டாக்டர் கர்ஹடே.
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் கடைசிப் படியாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சிறந்தது. இது சன்ஸ்கிரீன் உங்கள் தோலின் மேல் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, அந்த UV கதிர்களைத் தடுக்க திறம்பட செயல்பட அனுமதிக்கிறது.
உகந்த பாதுகாப்பிற்காக, மாய்ஸ்சரைசருக்குப் பிறகு இறுதிப் படியாக SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.
அலர்ஜி அல்லது எரிச்சலைத் தடுக்க புதிய தோல் பராமரிப்பு பொருட்களை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள், என்கிறார் டாக்டர் கர்ஹடே…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“