பியூட்டி பார்லர் தோற்கும்: பொலிவான முகத்திற்கு மாதுளையை பயன்படுத்தும் முறை தெரியுமா?

Skin care with pomegranate fruit: உங்கள் முகத்தை பார்ப்பவர்கள் நீங்கள் அழகு நிலையத்துக்கு சென்று வந்தீர்களா என்று உங்களிடம் கண்டிப்பாக கேட்பார்கள்.

Skin care news in tamil: மாதுளம் பழத்தை பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால் அது வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. அதனால்தான் அதன் நன்மையை நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதன் இனிப்பான சுவையைப் போல உங்கள் சருமத்தை இயற்கையாக ஒளிரச் செய்வதற்கும் மாதுளம் பழம் மிகவும் நல்லது. உங்கள் அழகை மெருகேற்ற மாதுளம் பழத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய சில எளிய வழிகளைப் பார்ப்போம்.

மாதுளம் பழத்தை பயன்படுத்தி தோலில் உள்ள இறந்த செல்களை நீக்குவது (exfoliation)

தோலில் உள்ள இறந்த செல்களை நீக்குவதால் முகத்தில் அதிசயங்கள் நிகழும். இதற்கு சிறிது மாதுளம் பழ விதைகளை அரைத்து அதில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் வட்ட வடிவில் நன்றாக பூசவும். பூசி முடித்து சிறிது நேரம் கடந்த பின்னர் வழக்கமான நீரில் நன்றாக கழுவவும்.

ஒரு கப் தயிர் போதும்ங்க…. ரிசல்ட் அப்புறம் பாருங்க!

மாதுளம் சாறை டோனராக (toner) பயன்படுத்துவது

இயற்கையான டோனர்கள் தான் உங்கள் சருமத்துக்கு சிறந்தது. உங்கள் முகத்தை வழக்கமாக கழுவுவது போல் லேசாக கழுவி விட்டு, மாதுளம்பழச் சாறைக் டோனராக பயன்படுத்துங்கள். மாதுளம் பழச்சாறை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்ய மறந்துவிடாதீர்கள். இதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்படும். அதிகப்படியான மாதுளம் பழச் சாறை பயன்படுத்தாதீர்கள் ஏனென்றால் அது உங்கள் முகத்தில் ஒரு வித ஒட்டும் உணர்வை ஏற்படுத்தும். சிறிது நேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவவும்.

Skin care face pack with pomegranate fruit: மாதுளம் பழச்சாறை பயன்படுத்தி முகப்பூச்சு செய்வது எப்படி?

உங்கள் வீட்டில் bentonite வகை களிமண் இருந்தால் அதனுடன் மாதுளம் பழச்சாறை கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தலாம். இதற்கு ஒரு தேக்கரண்டி bentonite வகை களிமண்ணுடன் மாதுளம் பழச்சாறை சிறிது சேர்த்து அதை நன்றாக கலந்து முகத்தில் பூசவும். இதை குறைந்தது 40 நிமிடங்கள் முகத்தில் உலரவிட்டு பிறகு கழுவவும். இது இயற்கையான பளபளப்பை உங்கள் முகத்துக்கு தரும். இதை பயன்படுத்திமுடித்த பிறகு உங்கள் முகத்தை பார்ப்பவர்கள் நீங்கள் அழகு நிலையத்துக்கு சென்று வந்தீர்களா என்று உங்களிடம் கண்டிப்பாக கேட்பார்கள்.

மாதுளம் பழம் எவ்வாறு உதவுகிறது.

மாதுளம் பழம் உங்கள் சருமத்துக்கு சிறந்த நண்பர் இது வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான பல நன்மைகளைக் கொண்டுள்ளது. Collagen மற்றும் elastin ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரித்து இது உங்கள் முகத்தின் texture ஐயும் மேம்படுத்துகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close