உருளைக்கிழங்கில் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்தை பிரகாசமாக்குவதற்கு பங்களிக்கும், காலப்போக்கில் கரும்புள்ளிகள் மறைய உதவும். கூடுதலாக, உருளைக்கிழங்கில் உள்ள இயற்கை என்சைம்கள் லேசான எக்ஸ்ஃபாலியேட் பண்புகளைக் கொண்டிருக்கலாம், புதிய செல்களை ஊக்குவிக்கும் மற்றும் முகப்பருவைத் தடுக்கும் திறன் கொண்டவை, என்று டாக்டர் ரிங்கி கபூர் கூறினார். (consultant dermatologist, cosmetic dermatologist, and dermato-surgeon, The Esthetic Clinics.)
உருளைக்கிழங்கு, முல்தானி மிட்டி, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவை உங்கள் சருமத்தை பளபளக்க உதவும் என்கிறார் பியூட்டி பிளாகர் ஷாலினி.
எப்படி செய்வது?
ஒரு பிரஷ் அல்லது காட்டன் கொண்டு இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்
15 நிமிடம் கழித்து கழுவவும்.
உருளைக்கிழங்கு பொட்டாசியம், வைட்டமின் சி, கேடகோலேஸ் என்சைம் மற்றும் அசெலிக் அமிலம் போன்ற சருமத்தை பிரகாசமாக்கும் பொருட்களின் இயற்கையான மூலமாகும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால், இந்த கூறுகள் கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், ஃப்ரெக்கிள்ஸ் மற்றும் டேனிங் ஆகியவற்றை திறம்பட குறைக்கும். கூடுதலாக, அவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களின் தோற்றத்தைக் குறைக்க உதவும், என்கிறார் டாக்டர் மேக்னா மோர் (aesthetic dermatologist-trichologist-cosmetologist, laser specialist, and founder, Skuccii Supercliniq)
இருப்பினும், உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் ஒரு முழுமையான தீர்வாக இருக்காது.
குறிப்பு: உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், அது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சாத்தியமான ஒவ்வாமை எதிர்வினைகளை தடுக்க பேட்ச் சோதனை செய்யுங்கள்.
உங்கள் குறிப்பிட்ட கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள், அவர்கள் உங்கள் தோல் வகை, வரலாறு மற்றும் உங்கள் பிரச்சினைகளின் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை வழங்க முடியும், என்று டாக்டர் கபூர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“