நடிகை பிரியங்கா சோப்ரா தனது மேக்கப்பை அகற்ற ஆர்கானிக் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறார், இது அவரது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
“நான் ஆர்கானிக் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துகிறேன், இது ஆச்சரியமாக இருக்கிறது. முகத்தில் ஓரிரு நிமிடங்கள் வைத்திருந்து, ஒரு துண்டை எடுத்து, அதை வெந்நீரில் போட்டு, ஈரமானதும், தோலில் மெதுவாக தேய்க்கவும். இது ஒரே நேரத்தில் எக்ஸ்ஃபோலியேட் மற்றும் ஹைட்ரேட் செய்கிறது, மேலும் உங்கள் மேக்கப்பை எல்லாம் அகற்றுகிறது. அது உண்மையில் என் வறண்ட சருமத்திற்கு உதவியது, ”என்று அவர் வீடியோவில் தனது தாயிடம் கூறுகிறார்.
நிபுணர்கள் கூட இதை பரிந்துரைக்கின்ற்னர், இதற்கு பதிலளித்த தோல் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா, “தேங்காய் எண்ணெய் காமெடோஜெனிக் – அதாவது இது துளைகளை அடைக்கும் திறன் கொண்டது, இது சருமத்தை உலர்த்தாமல் மேக்கப், அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது. ஆனால், முகப்பருக்கள் அதிகமாக இருந்தால் இது சிறந்த மாய்ஸ்சரைஸ் அல்ல.
இருப்பினும், மேக்கப்பை அகற்றுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்த விரும்புவோர், தோலில் ஒரு சிறிய அளவு (சுமார் ஒரு டீஸ்பூன் அளவு) மசாஜ் செய்யவும், வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும், பின்னர் மெதுவாக ஒரு துண்டுடன் தோலை உலர்த்தவும் பரிந்துரைக்கிறார்.
அனைத்து தோல் வகைகளும் எண்ணெயுடன் ஒத்துப்போவதில்லை, எனவே சிறிது சிறிதாக அறிமுகப்படுத்துவது சாத்தியமான முகப்பருக்களைத் தடுக்க உதவும். இது உங்கள் இறுதியான தோல் பராமரிப்பு வழக்கமாக இருக்கக்கூடாது. மேக்கப் ரிமூவரை வாங்கும்போது கோல்டு பிரெஸ்டு, ஆர்கானிக், வர்ஜின் அல்லது சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தவும்.
தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம், அதன் எண்ணெய் அமைப்பு சில தோல் வகைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒருவர் கவனிக்க வேண்டும். எண்ணெய், சரும துளைகளை அடைக்கக்கூடும், இது முகப்பரு மற்றும் பிற தோல் எரிச்சல்களுக்கு வழிவகுக்கும்.
இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராகப் பயன்படுத்திய பிறகு, முகத்தைக் கழுவ மென்மையான க்ளென்சரைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராகப் பயன்படுத்திய பிறகு, முகத்தைக் கழுவ மென்மையான க்ளென்சரைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
அவ்வாறு செய்வதன் மூலம், தேவையற்ற எரிச்சல் அல்லது முகப்பருக்களை ஏற்படுத்தாமல், மீதமுள்ள எண்ணெய், அழுக்கு அல்லது மேக்கப் எச்சங்களிலிருந்து உங்கள் சருமம் நன்கு சுத்தம் செய்யப்படும், என்று அழகுத் தோல் மருத்துவ நிபுணர் கல்பனா சாரங்கி கூறுகிறார்.
இதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஸ்வப்னா பிரியா ஆலோசகர், தேங்காய் எண்ணெய் ஒரு பயனுள்ள மற்றும் இயற்கையான மேக்கப் ரிமூவராக இருக்கும், ஏனெனில் இது வாட்டர் ப்ரூஃப் உட்பட மேக்கப்பை மென்மையாகவும் திறமையாகவும் நீக்குகிறது.
ஆனால், தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தும் போது, கரிம, சுத்திகரிக்கப்படாத மற்றும் கோல்டு பிரெஸ்டு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது முக்கியம், ஏனெனில் இந்த வகைகள் தூய்மையானவை மற்றும் இயற்கையானவை, மேலும் அவை சருமத்தை எரிச்சலூட்டும் எந்த சேர்க்கைகள் அல்லது இரசாயனங்கள் இல்லை.
இருப்பினும், எப்பொழுதும் முகம் முழுவதும் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்து, அது எந்த ஒவ்வாமை அல்லது எரிச்சலையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தவும்.
மனதில் கொள்ள வேண்டியவை
தேங்காய் எண்ணெய் பொதுவாக பெரும்பாலான தோல் வகைகளுக்கு பாதுகாப்பானது என்றாலும், உங்கள் தோல் வகை மற்றும் உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட தோல் கவலைகள் இருப்பதை கருத்தில் கொள்வது அவசியம். எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்புள்ள சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராகப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அது துளைகளை அடைத்து முகப்பருவை மோசமாக்கும் என்கிறார் டாக்டர் பிரியா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“