ரோஜா, பால், தேன்... இதழுக்கு மெருகூட்டும் இனிய காம்பினேஷன்!

Lips care : ரோஜா இதழ்கள் சருமத்துக்கு நல்லது, சிலர் ரோஸ் வாட்டரை வழக்கமாக பயன்படுத்துவர். அதே போல் சரும பராமரிப்புக்கு பால் செய்யும் நன்மைகளும்...

Lip Scrub At Home: மக்கள் தங்கள் சரும பராமரிப்புக்கு அதிகபப்டியாக இயற்கை வழிகளுக்கு திரும்பியுள்ளது இந்த ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள ஒரு நன்மை. தோல் பராமரிப்புக்காக வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சமயலறை சாமான்களை கொண்டும் தாங்களே செய்யக்கூடியவற்றை பற்றி மக்கள் அதிகமாக வாசிக்க துவங்கி விட்டனர். இதன் காரணமாக ஒப்பனை பொருட்கள் பயன்படுத்தப்படாமல் அலமாரிகளில் தூங்குகின்றன. பிற பகுதிகளை விட உதடுகளுக்கு கூடுதல் பராமரிப்பு தேவை ஏனென்றால் இங்குள்ள தோல் மிகவும் மென்மையானதாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் இருக்கும். சிலருக்கு எல்லா காலநிலைகளிலும் உதடு உலர்ந்து வெடித்து காணப்படும்.

இதுபோன்ற பிரச்சனையால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அப்படியென்றால் எளிதாக கிடைக்ககூடிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்க கூடிய உதட்டுக்கான ஸ்க்ரப்கள் தயாரிப்பது குறித்துப் பார்க்கலாம்.

தேங்காய் மற்றும் தேன் உதட்டு ஸ்க்ரப்

முகத்திற்கு வேலை செய்வது போலவே தேன் மற்றும் தேங்காய் உதட்டுக்கும் சிறந்தது. இவை இரண்டையும் கலந்து எளிதாக இந்த உதட்டு ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். இதற்கு தலா ஒரு தேக்கரண்டி தேன், தேங்காய் எண்ணெய், சிறிது பழுப்பு சர்க்கரை மற்றும் சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் ஆகியவை தேவைப்படும்.

முதலில் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சர்க்கரை மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒரு சரியான ஸ்க்ரப்பாக செய்துக் கொள்ள வேண்டும். இதை உதடுகளில் தேய்த்து மூன்று நிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும். இந்த ஸ்க்ரப் சருமத்துக்கு ஊட்டமளித்து இறந்த மற்றும் உலர்ந்த செல்களை அகற்றும்.

காபி மற்றும் தேன் ஸ்க்ரப்

தலா ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் காபித்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் போல ஆகும் வரை நன்றாக கலக்க வேண்டும். இந்த ஸ்க்ரப்பை உதட்டில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் உதடுகளை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரால் நன்றாக கழுவ வேண்டும். இப்போது உங்கள் உதடுகள் சுத்தமாக வெடிப்புகள் இல்லாமல் புதுமலர்ச்சியோடு காட்சி தரும்.

ரோஜா இதழ்கள் மற்றும் பால் ஸ்க்ரப்

ரோஜா இதழ்கள் சருமத்துக்கு நல்லது, சிலர் ரோஸ் வாட்டரை வழக்கமாக பயன்படுத்துவர். அதே போல் சரும பராமரிப்புக்கு பால் செய்யும் நன்மைகளும் நாம் அனைவரும் அறிந்ததே. சிறிது ரோஜா இதழ்கள் மற்றும் பாலை ஒன்றாக சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை வழக்கமான ஸ்க்ரப் போல உதடுகளில் தேய்த்து ஒரு நிமிடம் உலர விட்டு தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். பிறகு லிப் பாமை (lip balm) தேய்த்துக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close