Skin Care tips, Skin Care home made remedies, watermelon benefits for skin, watermelon rind for face pack, தோல், சருமம் பராமரிப்பு, தர்ப்பூசணி
Skin Care Tamil News: தர்பூசணி தோலை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அடுத்த முறை தர்பூசணி பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். மாறாக அதை பயன்படுத்தி உங்கள் சருமத்தை நன்றாக பராமரித்துக் கொள்ளலாம்.
Advertisment
தர்பூசணி பழத்தை மக்கள் அதன் சுவை மற்றும் சரும பராமரிப்பு பண்புகளுக்காக சுவைக்கின்றனர். மேலும் அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. எனவே அடுத்த முறை தர்பூசணி பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். மாறாக அதை பயன்படுத்தி உங்கள் சருமத்தை நன்றாக பராமரித்துக் கொள்ளலாம்.
Skin Care home made remedies: செய்முறை
Advertisment
Advertisements
* முதலில் பழத்தை நேர்த்தியாக செதுக்கி எடுத்து அதை தனியாக வைக்கவும்.
* அடுத்து அதன் தோலை துண்டு துண்டாக வெட்டி அதை மிக்ஸியில் போட்டு அரைத்து அதை ஒரு பேஸ்ட் போல செய்துக் கொள்ளவும்.
* இந்த பேஸ்டை குளிர்பதன பெட்டியில் ஐஸ் கட்டி செய்வதற்கு பயன்படுத்தும் அச்சில் ஊற்றி அதை freezer ல் சில மணி நேரம் வைக்கவும்.
* பிறகு அதிலிருந்து ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக தேய்க்கவும். இதை தினசரி செய்து வரவும்.
இந்த செயல்முறை எளிதாக இருந்தாலும், ஏன் ஐஸ் கட்டியாக இதை செய்து பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் வரும். ஏனென்றால் பொதுவாக ஐஸ் கட்டி நமது சருமத்துக்கு சிறந்தது. இது நமது முகத்தை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும். மேலும் இது முகப்பரு, முகம் சிவத்தல், தோல் எரிச்சல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது.
அதுமட்டுமல்லாமல் உங்கள் முகம் இளமைத் தோற்றத்தோடு இருப்பதற்கும் ஐஸ் கட்டிகள் சிறந்தவை. மேலும் இளவயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுவது மற்றும் முகச் சுறுக்கம் ஆகியவற்றை போக்கவும் உதவுகிறது.
உங்கள் முகம் இயற்கையான பொலிவுப் பெற தினசரி இதில் ஒரு ஐஸ் கட்டியைப் பயன்படுத்தினால் போதுமானது.
தர்பூசணி தோல் தேவையான ஈரப்பதத்தை உள்ளே வைத்து உங்கள் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் உணர செய்யும். தர்பூசணி பழத்தின் தோல் ஐஸ் கட்டி உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை அகற்றுவதோடு சருமத்தில் உள்ள சிறிய துளைகளை சுத்தம் செய்யவும் செய்கிறது.