Skin Care tamil news: உங்கள் சரும பராமரிப்புகாக நீங்கள் ஒரு உயர்தர அழகு நிலையத்துக்கு செல்ல வேண்டாம். இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தங்களது சருமத்தில் ஏறபடும் பல பிரச்சனைகளை சரிச்செய்ய முடியும் என்பதை தெளிவாக புரிந்துள்ளனர். உதாரணமாக ஒரு ஆடம்பரமான முகப்பூச்சுக் (luxurious facial) கூட வீட்டிலேயே செய்யக் கூடியது.
Advertisment
முத்து போன்று உங்கள் முகம் ஜொலிஜொலிக்க இந்த முத்து முகப்பூச்சை இந்த வாரம் செய்து பாருங்கள்.
2 தேக்கரண்டி – முத்து கிரீம் (Pearl cream) (ஆன்லைனில் கிடைக்கிறது)
1 தேக்கரண்டி – தேன்
2 தேக்கரண்டி – பால்
2 தேக்கரண்டி – ரோஸ் வாட்டர்
1 தேக்கரண்டி – எலுமிச்சை சாறு
1 – முட்டை
செய்முறை
முதலில் உங்கள் முகத்தை தண்ணீர் மற்றும் பால் கொண்டு சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். அடுத்து முத்துப் பொடி மற்றும் ரோஸ் வாட்டர் கொண்டு ஒரு ஸ்க்ரப் செய்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பிறகு முகத்தை கழுவி விட்டு, முத்துக் கிரீமை முகத்தில் பூசுங்கள். அப்படியே 15 நிமிடங்கள் இருக்கவும்.
அடுத்து முட்டை, தேன் மற்றும் எலுமிச்சை சாறை வைத்து ஒரு கலவையை தயாரிக்கவும். இவற்றை நன்றாக கலந்து அதில் சிறிது முத்துப் பொடியையும் போடவும். முதலில் போட்ட முகப்பூச்சு காய்ந்த பிறகு அதை வழக்கமான தண்ணீர் கொண்டு கழுவிவிட்டு, தயாரித்து வைத்துள்ள அடுத்த கலவையை முகத்தில் பூசவும். இது அடுத்த 15 நிமிடங்களுக்கு முகத்தில் நன்றாக உலர விடவும். பிறகு வெள்ளரி சாறு மற்றும் ரோஸ் வாட்டரை முகத்தில் பூசி அதை உலர விடவும். உலர்ந்த பிறகு மென்மையான பேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவவும். காய்ந்த பின்னர் உங்களுக்கு பொருந்தும் moisturizerயை பூசிக் கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil