Green Tea Bags Beauty Benefits: மூலிகை தேநீர் (Herbal Tea ) குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் இது உடம்பிலுள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.
தேநீர் போட்ட பிறகு, பெரும்பான்மையான நேரங்களில் மூலிகை டீபேக்கை (தேநீர் பைகளை) நாம் தூக்கி வீசிவிடுகின்றோம்.
இந்த டீபேக்கிலும் நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் தோல் பராமரிப்பு துயரங்களுடன் போராடும்போது இந்த டீபேக்ஸகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதை பல்வேறு தோல் பராமரிப்பு பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக பயன்படுத்தப்படலாம்.
எங்களை நம்பவில்லையா?
பயன்படுத்தப்பட்ட டீபேக்ஸ் மூலம் தீர்க்கக்கூடிய சில தோல் துயரங்கள் இங்கே.
*வீங்கிய கண்கள்: ஒழுங்கற்ற தூக்கத்துடன் நீண்ட நேரம் வேலை செய்வதால், நமது கண்கள் கருநிறமாகவும், வழக்கத்திற்கு மாறாக வீங்கியும் இருக்கும். உங்கள் கண்களில் ஒரு குளிர்ந்த டீபேக்கை வைத்து பாருங்கள், பின் மந்திரம் தானாக நடக்கும் .
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
* சிவத்தல்: டீ பேக்ஸில் எதிர்ப்பு அழற்சி சேர்மங்களைக் கொண்டிருப்பதால் (anti-inflammatory property), உங்கள் கண்களில் உள்ள எரிச்சலையும் சிவப்பையும் குறைக்க உதவும்
* சன் பர்ன்ஸ்: உங்கள் முகத்தில் சன் பர்ன்ஸ் உண்டென்றால் நீங்கள் சில ஈரமான மற்றும் குளிர்ந்த டீபேக்கை பயன்படுத்துங்கள்.
* எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப் (Exfoliating scrub): உங்கள் டி மண்டலத்தில் கருப்பு புள்ளிகள் மற்றும் வைட்ஹெட்ஸ் நிலையானதாக இருந்தால், டீபேக்ஸ் உங்களுக்கு தேவையானவை.
இது உங்கள் துளைகளை அவிழ்க்கவும், உங்கள் முகத்திலிருந்து அழுக்கு மற்றும் இறந்த சருமத்தை அகற்றவும் உதவுகிறது.
* DIY ஃபேஸ்மாஸ்க்: உங்கள் தோல் ஒவ்வொரு வருடமும் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து சுருக்கங்களுக்கு வழிவகுக்கும். ஆனால் டீபேக்ஸில் இருக்கும் தேயிலை இலைகளை ஃபேஸ்மாஸ்காக பயன்படுத்துவதன் மூலம், தோல் சுருக்கம் விழுவதை தவிர்க்கலாம் (சரியான உணவும் இதற்கு ரொம்ப முக்கியம் ). நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், டீபேக்கில் இருக்கும் தேயிலை இலைகள் aloe vera வுடன் கலந்து, ஃபேஸ்மாஸ்காக பயன்படுத்த வேண்டும்.