உங்கள் தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டிய மிகவும் ஆடம்பரமான தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் ஒன்று’ ஃபேஷியல் ஆயில். அவை உங்கள் தோலில் அதிசயங்களைச் செய்வது மட்டுமல்லாமல், அவற்றின் அமைதியான வாசனையால் புலன்களை அமைதிப்படுத்துகின்றன.
Advertisment
உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ற, ஃபேஷியல் ஆயிலை பயன்படுத்துவது, உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கும்.
இருப்பினும், ஆரஞ்சு, அவகடோ அல்லது குங்குமாதி போன்ற எந்த எண்ணெயை நீங்கள் தேர்வு செய்தாலும், அதை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே, அதன் பலனைப் பெற முடியும் என்று அழகுக்கலை நிபுணர் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா கூறினார்.
இன்ஸ்டாகிராம் பதிவில், மருத்துவர் குப்தா “உங்களுக்குப் பிடித்த ஃபேஷியல் ஆயிலை பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளைப்” பகிர்ந்து கொண்டார், அதில் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் முடிவில்’ ஃபேஷியல் ஆயிலை பயன்படுத்தவும், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்யவும் அறிவுறுத்தினார்.
சன்ஸ்கீரின் உடன் ஃபேஷியல் ஆயிலை கலப்பதற்கு பதிலாக, "மேம்படுத்தப்பட்ட நீரேற்றத்திற்காக’ மாய்ஸ்சரைசரில் சேர்க்கவும்" என்று அவர் கூறினார்.
அதற்கு இன்ஸ்டாகிராம் யூசர், ஏன் சன்ஸ்கீரின் மற்றும் ஃபேஷியல் ஆயிலை கலக்க முடியாது? ஏன் மாய்ஸ்சரைசர் மற்றும் எண்ணெய் இரண்டையும் பயன்படுத்த வேண்டும்? எண்ணெய் மட்டும் போதாதா? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த மருத்துவர் குப்தா, "எண்ணெயில் உள்ள பொருட்கள் உங்கள் சன்ஸ்கிரீனை செயலிழக்கச் செய்யலாம்" மற்றும் தோல் பராமரிப்பு வழக்கத்தில் சன்ஸ்கீரின் எப்போதும் கடைசி படியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“