/tamil-ie/media/media_files/uploads/2022/07/aloe-vera-gel-2.jpg)
DIY Aloe Vera gel for healthy skin
கற்றாழையில் ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலுவானவை. இது பாக்டீரியா பரவுவதைத் தடுக்கிறது. பாலிசாக்கரைடுகள் மற்றும் கிபெரெலின்கள் இதில் காணப்படுகின்றன.
கற்றாழை புதிய செல்கள் வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவை வீக்கம் மற்றும் சிவப்பையும் குறைக்கின்றன. ஒரு அஸ்ட்ரிஜென்டாக, இது அதிகப்படியான சீபம், அழுக்கு மற்றும் நுண்ணுயிரிகளை வெளியேற்றுவதன் மூலம் துளைகளை சுருக்குகிறது.
கற்றாழை ஜெல் முகப்பரு பிரச்சனைகளை கவனித்து, வீக்கத்தைக் குறைக்கும், மேலும் சருமத்தை ஊட்டமளித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஆனால் எல்லா தயாரிப்புகளையும் போல, இப்போது கற்றாழை ஜெல்லில் கூட கலப்படம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
உங்கள் வீட்டில் கற்றாழை செடி இருக்கிறதா? இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி நீங்களே சொந்தமாக கற்றாழை ஜெல் தயாரிக்கலாம்.
எப்படி செய்வது?
முதலில், உங்கள் கைகளையும், கற்றாழை ஜெல் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். அதன்படி, கற்றாழை, ஒரு கிண்ணம், ஒரு கத்தி, ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு கண்ணாடி ஜாடி ஆகியவற்றைக் கழுவவும்.
இப்போது, கற்றாழையின் அடிப்பகுதியில்’ இலைகளை வெட்டுங்கள். ஏனெனில் மிகவும் பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் அடியில்தான் காணப்படுகின்றன, அதில் ஆரோக்கியமான ஜெல் நிறைய உள்ளன.
கற்றாழையை கழுவி உலர வைக்கவும், இப்போது கத்தியால் விளிம்புகளை வெட்டவும்.
வெட்டிய பிறகு, அதிலிருந்து அடர் மஞ்சள் நிறத்தில் பிசின் வெளியேறும். பிசின் வடிகட்ட’ இலைகளை ஒரு கண்ணாடிக்குள் 10-15 நிமிடங்கள் வைக்கவும். நிபுணர்களின் கூற்றுப்படி, பிசினில்’ லேடெக்ஸ் (latex) உள்ளது, இது சருமத்தை எரிச்சலூட்டும்.
பிசின் வடிகட்டியவுடன், கத்தி அல்லது பீலர் பயன்படுத்தி’ கற்றாழையை உரித்து’ ஒரு ஸ்பூன் அல்லது கத்தியால் ஜெல்லை வெளியே எடுத்து’ சுத்தமான கண்ணாடி ஜாடியில் வைக்கவும்.
கற்றாழை ஜெல் ரெடி.
செடி இளமையாக இருந்தால், அதிக பட்சம் கற்றாழையின் ஒரு இலை அல்லது இரண்டை மட்டும் வெட்டுங்கள், அலோ வேரா ஜெல்லை நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது ஆபத்தானது.
ஜெல்லின் ஆயுளை அதிகரிக்க, வைட்டமின் சி பவுடர் போன்ற இயற்கைப் பாதுகாப்பை நீங்கள் அதில் சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.