/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-06T154617.271.jpg)
skincare, skincare tips, easy face packs to make at home, milk and bread for skincare, indian express, indian express news, skincare news, skincare news in tamil, skincare latest news, skincare latest news in tamil
Skin Care Tips: சரும பராமரிப்பு என்பது ஒரு விரிவான விவகாரம் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. உங்கள் சருமத்துக்கு எது சிறப்பாக ஒத்து வரும் மற்றும் நீண்ட காலத்துக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தெரிந்துக் கொண்டால் மட்டும் போதும். பால் மற்றும் ரொட்டி (bread) ஆகிய இரண்டு பொருட்கள் கொண்டு எளிதாக செய்யக்கூடிய முகப்பூச்சுக் குறித்து இன்று பார்க்கலாம்.
பால் மற்றும் ரொட்டி ஆகியவை சிறந்த காலை உணவு என்று நினைத்துக் கொண்டால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சருமம் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜொலிஜொலிக்க வேண்டுமானால் இந்த முகப்பூச்சை முயற்சித்து பாருங்கள்.
செய்முறை
ஒரு துண்டு ரொட்டியை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் 3 தேக்கரண்டி பாலை ஊற்றிக் கொள்ளுங்கள். பால் காய்ச்சாததாகவும், புதியதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அதன் பச்சை தன்மை மற்றும் புரதங்கள் மாறாமல் இருக்க வேண்டும்.
ரொட்டி பாலில் நன்றாக ஊறிய பிறகு அதை ஒரு கரண்டி கொண்டு நன்றாக மசித்து ஒரு பேஸ்ட் போல செய்துக் கொள்ளுங்கள். உங்கள் முகத்தை நன்றாக கழுவி அதை உலர விடவும். பிறகு இந்த பால் மற்றும் ரொட்டி கொண்டு தயாரித்துள்ள பேஸ்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசிக் கொள்ளவும். அதை முகத்தில் 15 நிமிடங்கள் உலரவிடவும். நன்றாக உலர்ந்த பிறகு விரல்கள் கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்துவிடவும். இப்படி செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். முகம் புது மலர்ச்சியோடு இருக்கும், மேலும் இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
அதன்பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். இதை குறைந்தது வாரத்துக்கு ஒரு முறை செய்துக் கொள்ளலாம். கூடுதல் நன்மைக்காக இந்த முகப்பூச்சுடன் சிறிது தேன் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் சருமம் மிகவும் உணர்ச்சிவாய்ந்ததாக இருந்தால் அதிக நேரம் முகத்தை மசாஜ் செய்யாதீர்கள் மேலும் பால் உங்களுக்கு ஒவ்வாமை என்றால் இதை செய்ய வேண்டாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us