Advertisment

கடையில் வாங்கினால் ரொம்ப காஸ்ட்லி.. நீங்களே செய்யலாம்.. ஹோம் மேட் ஆன்டி ஏஜிங் சீரம் ரெசிபி!

அக்குபிரஷர் சிகிச்சையாளர் ரீமா குப்தா, யார் வேண்டுமானாலும் வீட்டில் தயார் செய்யக்கூடிய ஒரு சுவாரஸ்யமான ஆன்டி ஏஜிங் சீரம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Skin Care Tips

Skin Care Tips: Easy homemade anti-ageing serum recipe

முதுமை என்பது வளர்ச்சியின் ஒரு பகுதி. ஆனால் அறிகுறிகள் உங்களைத் தொந்தரவு செய்தால், சரியாக சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தி, உங்கள் சருமத்தை கவனித்து, வயதாவதை சில ஆண்டுகள் தாமதப்படுத்த ஏன் கூடாது?

Advertisment

நீங்கள் 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், உங்கள் சருமத்தில் ஏஜ் ஸ்பாட்ஸ், சுருக்கங்கள் மற்றும் பிக்மென்டேஷன் தோன்ற ஆரம்பித்துவிட்டதாக உணர்ந்தால், உங்கள் கைகளில் விஷயங்களை எடுத்துக்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் இது.

ரீமா குப்தா, ரெய்கி கிராண்ட்மாஸ்டர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சையாளர், யார் வேண்டுமானாலும் வீட்டில் தயார் செய்யக்கூடிய ஒரு சுவாரஸ்யமான ஆன்டி ஏஜிங் சீரம் ஒன்றை பகிர்ந்துள்ளார். சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த பொருட்களை எளிதாக வாங்கலாம்!

சீரற்ற தோல் நிறம், பிக்மென்டேஷன், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை, சீரம் மூலம் எளிதில் சமாளிக்க முடியும், இது சருமத்தை சுத்தப்படுத்தி’ பளபளப்பை சேர்க்கிறது.

“இந்த சீரம் சுருக்கங்கள், ஏஜ் ஸ்பாட்ஸை அகற்றவும், சருமத்தை இறுக்கவும் உதவுகிறது. அனைத்து பொருட்களும் இயற்கையாக இருப்பதால், எந்த பக்க விளைவுகளும் இல்லை, ”என்று அவர் கூறினார்.

தேவையான பொருட்கள்

அரிசி தண்ணீருக்கு

1 கப் - அரிசி

2 கப் – தண்ணீர்

பேஸ்ட் செய்வதற்கு

2 டீஸ்பூன் - அரிசி தண்ணீர்

1 டீஸ்பூன் - கற்றாழை ஜெல், புதியது அல்லது வாங்கியது

2 - வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்

செய்முறை

அரிசி தண்ணீருக்கு

*அரிசியைக் கழுவவும்.

*அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.

* 15-20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

*அரிசியை வடிகட்டி அரிசி நீரை சேமிக்கவும்.

பேஸ்ட் செய்வதற்கு

*ஒரு கிண்ணத்தில், இரண்டு தேக்கரண்டி அரிசி தண்ணீர், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு காப்ஸ்யூல்களில் இருந்து வைட்டமின் ஈ எண்ணெய் சேர்க்கவும்.

*நன்றாகக் கலந்து சீரான பேஸ்டாக மாற்றவும்.

எப்படி அப்ளை செய்வது?

இரவில் மேக்கப் அனைத்தையும் நீக்கிவிட்டு, முகத்தை முழுவதுமாக கழுவியவுடன் சீரம்- முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். உங்கள் விரல் நுனியால் முகம் மற்றும் கழுத்தில் 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து’ உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். அதன் பிறகு நீங்கள் வழக்கமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் சீரம் பயன்படுத்தவும்.

குறிப்பு: பேஸ்ட்டை காற்று புகாத ஜாடியில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்து’ 2-3 நாட்களுக்கு வைக்கலாம்.

இந்த பொருட்கள் ஏன் அதிசயங்களைச் செய்கின்றன?

*அரிசி நீரில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் கலவைகள் உள்ளன, அவை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை கட்டுப்படுத்துகின்றன, இதுதான் வயதான வேகத்தை அதிகரிக்க காரணம். அரிசி நீர் பாதிப்பைக் குறைத்து, சருமத்தை சுருக்கமில்லாமல் மாற்ற உதவுகிறது.

* கற்றாழை சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை லாக் செய்கிறது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் சருமத்தை குணப்படுத்த உதவுகிறது.

*வைட்டமின் ஈ காப்ஸ்யூல்’ ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுப்பதற்கும், சருமத்தை இளமையாகக் காட்டுவதற்கும், ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கும் நல்லது.

இதை முயற்சி செய்து, வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்தால் எங்களிடம் கூறுங்கள்?

இதையும் படிக்க

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? நிபுணர் அங்கீகரித்த கால் மசாஜ்.. எப்படி செய்வது?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment