/tamil-ie/media/media_files/uploads/2022/08/skincare759_getty.jpg)
Effective DIY face cleansers for instant glow
இரண்டு வருடங்கள் வொர்க் ஃபிரம் ஹோம், நம்மில் பெரும்பாலானோருக்கு தோல் பராமரிப்பதில் புதிய போக்கை உருவாக்கியுள்ளது. உண்மை என்னவென்றால், நம் சருமத்தை நாம் விரும்புகிறோம், இன்று மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அத்துடன் சில சமயங்களில் நம் சருமத்தை பராமரிக்க பாரம்பரிய வழிகளை நாடுகிறோம்.
இது, பல ஆண்டுகளாக முயற்சி செய்து, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட நமது பண்டைய தோல் பராமரிப்பு வைத்தியங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.
உங்கள் முகத்தை சுத்தம் செய்து இயற்கையாக பளபளக்க, வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய 3 ஹோம்மேட் நேச்சுரல் க்ளென்சர் இங்கே..
பால்
/tamil-ie/media/media_files/uploads/2022/08/milk-2.jpg)
பால் ஒரு ஒரு சரியான ஃபேஷியல் க்ளென்சராக செயல்படுகிறது, இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், துளைகளை அடைக்கவும் உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
1. பாலில், ஊறவைத்த காட்டன் பாலை நனைத்து, அதை சமமாக உங்கள் முகத்தில் தடவவும்.
2. வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
3. சுத்தமான, மிருதுவான மற்றும் ஊட்டமளிக்கும் சருமத்திற்கு இதை தினமும் செய்யவும்.
தக்காளி
/tamil-ie/media/media_files/uploads/2022/08/tomato759.jpg)
தக்காளியில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை நீங்கள் விரும்பும் தோலைக் கொடுக்கும்.
எவ்வாறு பயன்படுத்துவது?
பிரிட்ஜில் வைத்த தக்காளியை இரண்டாக நறுக்கி, முகம் முழுவதும் மெதுவாக மசாஜ் செய்யவும்.
5-10 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு சாதரண நீரில் கழுவவும்,
மிருதுவான, மென்மையான தோற்றமுடைய சருமத்துக்கு தொடர்ந்து இதை பயன்படுத்துங்கள்.
தேன்
/tamil-ie/media/media_files/uploads/2022/08/honey-1-1.jpg)
தேன் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது; இது உங்கள் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் முகப்பருவைப் போக்கவும் உதவுகிறது. இது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் பிரகாசமாக்குகிறது.
எப்படி பயன்படுத்துவது?
மென்மையான, புதிய தோற்றமுடைய தோலுக்கு, அரை டீஸ்பூன் பச்சை தேனை எடுத்து, ஈரமான தோலில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.