புருவம் மெலிந்து இருக்கிறதா? கவனம்.. இதுவும் காரணமாக இருக்கலாம்

தோல் நிலைகள் முதல் ஹார்மோன் மாற்றங்கள் வரை, பல காரணங்களால் ஒருவர் புருவம் மெலிந்து போகலாம்.

தோல் நிலைகள் முதல் ஹார்மோன் மாற்றங்கள் வரை, பல காரணங்களால் ஒருவர் புருவம் மெலிந்து போகலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Eyebrow thinning causes

Eyebrow thinning causes

புருவங்கள் நம் முகத்தை அழகாக காட்ட உதவுகின்றன. நாம் அனைவரும் அடர்த்தியான புருவங்களை விரும்புகிறோம். இருப்பினும், உச்சந்தலையில் உள்ள முடியைப் போலவே, புருவ முடிகளும் மெல்லியதாக இருக்கும்.

Advertisment

நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நிலைகள் முதல் ஹார்மோன் மாற்றங்கள் வரை, பல காரணங்களால் ஒருவர் புருவம் மெலிந்து போகலாம். தோல் மருத்துவ நிபுணர் ஆஞ்சல் பந்த், இதுபோன்ற சில பொதுவான காரணங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

தோல் மருத்துவரால் பகிரப்பட்ட சில சாத்தியமான காரணங்கள் இங்கே உள்ளன.

தைராய்டு குறைபாடு

Advertisment
Advertisements

நிபுணரின் கூற்றுப்படி, " தைராய்டு கோளாறு, மிகவும் பொதுவான காரணம்". அதிகப்படியான மற்றும் செயலற்ற தைராய்டு இரண்டும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

ஆனால், உங்கள் புருவங்களின் முனைகள் மெல்லியதாக இருப்பதை நீங்கள் கவனித்தால், அது பொதுவாக பிந்தையவற்றின் அறிகுறியாகும்.

அலோபீசியா அரேட்டா

புருவங்கள் மெலிவதற்கு முக்கிய காரணம் ‘அலோபீசியா அரேட்டா’ எனப்படும் முடி உதிர்தல் நிலை. "இது ஒரு ஆட்டோ இம்யூன் நிலையாகும், அங்கு உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு’ மயிர்க்கால்களை தவறாக தாக்குகிறது, இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது"

வயோதிகம்

முதுமை என்பது உங்கள் புருவங்கள் மெலிவதற்கு வழிவகுக்கும் மற்றொரு காரணம். 45 வயதைத் தாண்டிய பிறகு, உங்கள் புருவங்கள் குறைவாகவே தோன்றும் என்று டாக்டர் பாந்த் தெளிவுபடுத்தினார்.

ஹெல்த்லைன் படி, ஊட்டச்சத்து குறைபாடுகள், அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி, காண்டாக்ட் டெர்மடிடிஸ், செபோர்ஹெக் டெர்மடிடிஸ் மற்றும் பூஞ்சை தொற்று ஆகியவை புருவம் மெலிவதற்கான பிற சாத்தியமான காரணங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: