நம்மில் பலர் கிளென்சிங்,, டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் உள்ளடக்கிய CTM வழக்கத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றும்போது – ஃபேஷியல் எண்ணெய்கள் மூலம் தோல் பராமரிப்பு வழக்கத்தை சமன் செய்ய வேண்டிய நேரம் இது, இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், பல தோல் பிரச்சனைகளைத் தீர்த்து ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கும்.
இருப்பினும், பல வகையான ஃபேஷியல் எண்ணெய்கள் இருப்பதால், தனக்கென சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது சற்று குழப்பமாக இருக்கும். ஆனால் கவலை வேண்டாம், மீரா கபூர் சமீபத்தில் பல்வேறு ஃபேஷியல் எண்ணெய்களின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகளை விவரிக்கிறார்.
கோல்ட் பிரஸ்ட் செசாமி ஆயில் (Cold-pressed sesame oil)
பலன்கள்: மீராவின் கூற்றுப்படி, இது ஒரு சூடான, ஊட்டமளிக்கும் எண்ணெய், இது வாதத்தை சமப்படுத்தவும் வறட்சியை எதிர்த்துப் போராடவும் சிறந்தது.
பாடி மசாஜ், ஆயில் புல்லிங், காதுகள் மற்றும் மூட்டுகளில் எண்ணெய் பூசுவதற்கு இதைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார்.
பீச் கர்னல் எண்ணெய் (Peach kernel oil)
பலன்கள்: இது லேசான மற்றும் ஈரப்பதமூட்டும் எண்ணெய் மற்றும் ஒமேகா 3, 6, 9 மற்றும் வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. “இது க்ரீஸ் இல்லாமல் ஹைட்ரேட் செய்கிறது,”.
இந்த எண்ணெயை தோல் நெகிழ்ச்சியை மேம்படுத்த’ முக மசாஜ் செய்ய பயன்படுத்தலாம், மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு நல்லது.
ரோஸ்ஹிப் எண்ணெய் (Rosehip oil)
நன்மைகள்: இந்த எண்ணெய் “அதிக கனமானதாகவோ அல்லது இலகுவாகவோ இருக்காது” என்று மீரா கூறினார். இது வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ கொண்ட ஈரப்பதமூட்டும் எண்ணெய், தழும்புகளை மறைப்பதற்கு உதவுகிறது.
எப்பொழுது தவிர்க்க வேண்டும்: உங்களுக்கு முகப்பரு வாய்ப்புள்ள சருமம் இருந்தால் ரோஸ்ஹிப் எண்ணெயைத் தவிர்க்கவும். ஏனெனில், இது கரும்புள்ளிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அஃப்டர் ஷவர் எண்ணெய் (After-shower oil)
பலன்கள்: இந்த எண்ணெய் இலகுவானது, விரைவாக உறிஞ்சி இயற்கையில் நீரேற்றம் கொண்டது.
மீராவின் கூற்றுப்படி, இது குளியலுக்குப் பிறகு பயன்படுத்த ஏற்றது மற்றும் செல்ஃப் மசாஜ் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது “தெய்வீக வாசனை” கொண்டது.
ஆப்ரிகாட் கர்னல் எண்ணெய் (Apricot kernel oil)
பலன்கள்: இது அடிப்படையிலே ஒரு குணப்படுத்தும் ஒரு எண்ணெய். இது தோல் மற்றும் முடியை மென்மையாக்க உதவுகிறது.
“மார்பு மற்றும் முதுகில் மசாஜ் செய்யும் போது’ ஒரு சளி நீக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். இது வாதத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் பொடுகுக்கு சிகிச்சையளிக்கிறது.
கோல்ட் பிரஸ்ட் கடுகெண்ணெய் (Cold-pressed mustard oil)
பலன்கள்: இது ஒரு சூடாக்கும் எண்ணெய், இரத்த ஓட்டம் மற்றும் வெப்பத்தை உருவாக்கி தக்கவைக்க உதவுகிறது. ஆனால், அது பித்தத்தை மேலும் மோசமாக்குகிறது. எனவே, இந்த எண்ணெயை குறைவாக அடிக்கடி பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த எண்ணெயை ஒரு பல் பூண்டு சேர்த்து சூடாக்கி பாதங்களை மசாஜ் செய்ய பயன்படுத்தவும். இது இருமல் மற்றும் தசை வலிகளை போக்க உதவுகிறது என்று மீரா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“