முகத்தில் முடி இருப்பது உங்கள் பளபளப்பை மங்கச் செய்யலாம், மேக்-அப் பொருட்களை பிளென்ட் செய்வதில் தடைகளை ஏற்படுத்தலாம் அல்லது தோல் பராமரிப்புப் பொருட்களின் வேலையில் தலையிடலாம்.
முக முடியை அகற்ற வாக்ஸிங், த்ரெடிங் மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்ற செயல்முறைகளை நாடலாம். இருப்பினும், நீங்கள் வலியைத் தவிர்க்க விரும்பினால், அல்லது ஒரு காசு கூட செலவழிக்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே முக முடிகளை அகற்றுவதற்கான இயற்கையான வழிகளுக்குத் திரும்பலாம்!
வீட்டு வைத்தியம் முக முடிகளை அகற்றாது, ஆனால் அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மஞ்சள், முட்டை, கொண்டைக்கடலை மாவு போன்ற வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்கள் உண்மையில் அதிசயங்களைச் செய்யும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
பியூட்டி குரு, ஷானாஸ் ஹுசைன் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற இயற்கையான மற்றும் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய முறைகளைப் பகிர்ந்து கொண்டார்.
முட்டை வெள்ளை மாஸ்க்

மஞ்சள் கருவில் இருந்து முட்டையின் வெள்ளைக்கருவை பிரித்தவுடன், ஒரு தேக்கரண்டி சோள மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். கெட்டியான பேஸ்டாக மாறும் வரை இந்த பொருட்கள் அனைத்தையும் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் மெதுவாக தடவவும். உங்கள் தோல் இறுக்கமாக உணர்ந்தவுடன், மாஸ்கை உரிக்கவும்.
நல்ல முடிவுகளைப் பார்க்க, மாஸ்கை உரிப்பதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்கவும். இப்படி செய்வதால், முடி அகற்றப்படுவது மட்டுமல்லாமல், இறந்த செல்கள் கூட வெளியேறும்.
வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப்

உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், இதைவிட சிறந்த இயற்கையான முடி அகற்றும் தீர்வை நீங்கள் கேட்க முடியாது. இது முக முடியை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் முகத்தை முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் வளர்க்கவும் உதவும்.
இந்த ஸ்க்ரப் செய்ய, பாதி வாழைப்பழத்தை எடுத்து சரியாக மசிக்கவும். மசித்த வாழைப்பழத்தில், இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் சேர்த்து, இவை அனைத்தையும் ஒரு பேஸ்டாக கலக்கவும். பேஸ்டை உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து, முடி வளர்ச்சியின் எதிர் திசையில் தடவவும்.
3-4 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்த பிறகு, பேஸ்டை உங்கள் முகத்தில் அப்படியே விடவும். உங்கள் தோல் இறுக்கமாக உணர்ந்தவுடன், அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“