scorecardresearch

Skin care tips: பிரகாசமான சருமத்துக்கு வைட்டமின் சி சீரம்.. நீங்களே வீட்டில் செய்யலாம்.. எப்படினு பாருங்க?  

உங்கள் சருமம் புத்துயிர் பெறவும், சருமத்தின் தெளிவை மேம்படுத்தவும் நீங்கள் விரும்பினால், உங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் வைட்டமின் சி அவசியம் இருக்க வேண்டும்.

Vitamin C serum
Skin care tips Homemade vitamin C serum recipe

வைட்டமின் சி, அழகு சாதனப் பொருட்களில் காணப்படும் மிக முக்கிய மூலப்பொருள், இது பல தோல் நன்மைகளுக்கு அறியப்படுகிறது.

இது, சுற்றுச்சூழலினால் ஏற்படும் பாதிப்புகள், சூரிய வெளிபாடு மற்றும் மந்தமான தோற்றமளிக்கும் சருமத்தில் இருந்து குணப்படுத்தி, உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது செல் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது, எனவே இது ஒரு அத்தியாவசிய தோல் ஊட்டச்சத்து மற்றும் சப்ளிமெண்டாக அமைகிறது.

உங்களுக்கு ஏன் வைட்டமின் சி தேவை?

இது சருமத்திற்கு மிகவும் பயனுள்ள ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது கரும்புள்ளிகளை  நீக்கி தெளிவான சருமத்தை கொடுக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது அடிப்படையில் தோலை ஒன்றாக இணைத்து இறுக்கமாகவும் பிரகாசமாகவும் ஆக்குகிறது.

எனவே உங்கள் சருமம் புத்துயிர் பெறவும், சருமத்தின் தெளிவை மேம்படுத்தவும் நீங்கள் விரும்பினால், உங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் வைட்டமின் சி அவசியம் இருக்க வேண்டும்.  

இந்த ஊட்டச்சத்தின் மிகவும் விரும்பப்படும் தயாரிப்புகளில் ஒன்று’ வைட்டமின் சி சீரம் ஆகும். அதை வாங்க அதிக செலவாகும். ஆனால், பைசா செலவில்லாமல், வைட்டமின் சி சீரம் நீங்களே வீட்டில் எளிதாக தயாரிக்கலாம், எப்படி என்பது இங்கே:

உங்களுக்கு தேவையான பொருட்கள்

1. ரோஸ்வாட்டர்

2. வைட்டமின் சி பவுடர்(எல்-அஸ்கார்பிக் ஆசிட்)

3. வெஜிடபிள் கிளிசரின்

4. கிளாஸ் டிராப்பர் பாட்டில் (அடர் வண்ணம் ஒன்றைத் தேர்வு செய்யவும்)

வைட்டமின் சி சீரம் தயாரிப்பது எப்படி?

ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை ஊற்றவும், பின்னர் 1/4 டீஸ்பூன் வைட்டமின் பவுடரை சேர்க்கவும். பொடியை சரியாக கரைக்க நன்றாக கலக்கவும். இப்போது கலவையில் 1 டீஸ்பூன் வெஜிடபிள் கிளிசரின் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். பயன்படுத்துவதற்கு முன்பு சிறிது நேரம் குளிரூட்டவும்.

எச்சரிக்கை: உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், நீங்கள் வைட்டமின் பொடியின் பகுதியைக் குறைக்கலாம். அதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லின் சில துளிகள் கூட சேர்க்கலாம்.

உணவில் இருந்து வைட்டமின் சி பெறுவது எப்படி?

இந்த வைட்டமின் உங்கள் சருமத்தில் பயன்படுத்துவதைத் தவிர உங்கள் உணவிலும் சேர்க்கலாம். இது ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற பல பழங்களில் காணப்படுகிறது. ஒரு நடுத்தர அளவிலான ஆரஞ்சு பழத்தில் சுமார் 70 மிகி வைட்டமின் சி உள்ளது, இது பிரபலமான ஆதாரங்களில் ஒன்றாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Skin care tips homemade vitamin c serum recipe