சரும பராமரிப்புக்காக நிறைய பணம் செலவளித்து ஃபேஸ் க்ரீம்கள், சீரம், டோனர் போன்ற பொருள்களை வாங்குபவர்கள் ஏராளம். ஆனால், உணவின் மூலம் கிடைக்கக் கூடிய சத்துகளுக்கு நிகராக எதுவும் இல்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சரும பராமரிப்புக்கு உதவக் கூடிய உணவுகள் குறித்து தற்போது காணலாம்.
சருமம் ஆரோக்கியமாக இருக்க கொலஜன் மிக அவசியமான ஒன்று. அதனடிப்படையில், கொலஜன் சத்துகள் நிறைந்த உணவுகளை நாம் அவசியம் சாப்பிட வேண்டும்.
எலும்பு சூப், சிக்கன் மற்றும் மீன் ஆகியவற்றில் கொலஜன் இருக்கிறது. இந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். குறிப்பாக, சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றில் கொலஜன் மட்டுமின்றி புரதமும் இருக்கிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவி செய்கிறது.
வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், கொலஜனை அதிகரிக்க முடியும். அதன்படி, கொய்யாப்பழம், பெர்ரிஸ், குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
இதேபோல், உணவில் தேவையான அளவு பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில், சல்ஃபர் இருப்பதால் கொலஜனை அதிகப்படுத்த உதவி செய்கிறது. மேலும், சின்க் மற்றும் காப்பர் சத்துகள் இருக்கும் உணவுகளும் தவறாமல் சாப்பிட வேண்டும். இதற்காக முந்திரி, பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.
இவை தவிர சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“