Advertisment

என்ன செய்தாலும் முகப்பரு போகவில்லையா? விரைவாக குணப்படுத்த தோல் மருத்துவர் சொல்வதை கேளுங்கள்!

சில நேரங்களில் நாம் ஏதாவது முக்கிய நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன், பரு வெடிக்கும். குறிப்பாக அவை பெரிதாகவோ அல்லது சீழ் நிரம்பி இருந்தாலோ, நமக்கு மனமே உடைந்துவிடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pimple treatment

என்ன செய்தாலும் முகப்பரு போகவில்லையா? விரைவாக குணப்படுத்த தோல் மருத்துவர் சொல்வதை கேளுங்கள்!

ஹார்மோன் மாற்றம் (உங்கள் மாதவிடாய் காலத்தில்), அதிக மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவு முறை, உங்கள் மேக்கப்பை சரியாகக் கழுவாமல் இருப்பது, நீரிழப்பு, தூக்கமின்மை, தோல் பராமரிப்புச் செயலில் அதிகளவு பயன்படுத்துதல், ஸ்டீராய்டுகள் மருந்துகள் அல்லது ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவு அல்லது வறுத்த, எண்ணெய் உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், முகத்தில் திடீரென பரு வருகிறது என தோல் மருத்துவர் மானசி ஷிரோலிகர் கூறுகிறார்.

Advertisment

சில நேரங்களில் நாம் ஏதாவது முக்கிய நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன், பரு வெடிக்கும். குறிப்பாக அவை பெரிதாகவோ அல்லது சீழ் நிரம்பி இருந்தாலோ, நமக்கு மனமே உடைந்துவிடும்.

இங்கே முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கான சில பயனுள்ள வழிகளை மருத்துவர் பரிந்துரைக்கிறார்; படிக்கவும்.

சாலிசிலிக் ஆசிட் (Salicylic acid)

சாலிசிலிக் அமிலம் ‘ஜெல், கிரீம் அல்லது சீரம் என பல வடிவங்களில் கிடைக்கிறது. இது துளைகளை அடைப்பதன் மூலமும், சருமத்தின் மேல் அடுக்கில் இருந்து இறந்த சரும செல்களை வெளியேற்றுவதன் மூலமும், பருக்களை விரைவாக குணப்படுத்துகிறது. மேலும் மற்ற பருக்கள் உருவாவதைக் குறைக்கவும் உதவும். இருப்பினும், சாலிசிலிக் அமிலம் சருமத்தை உலர்த்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே நீங்கள் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிம்பிள் பேட்ச்சஸ் (Pimple patches)

பிம்பிள் பேட்ச்சஸ் ‘ சீழ் உறிஞ்சும் ஹைட்ரோகலாய்டு பொருட்களால் செய்யப்படுகின்றன. அவை சாலிசிலிக் அமிலம், டீ ட்ரீ ஆயில் அல்லது சென்டெல்லா போன்ற இனிமையான பொருட்கள் போன்ற முகப்பரு எதிர்ப்பு பொருட்களையும் கொண்டிருக்கிறது. பரு வந்தால், நாம் அதைத் தொடுவோம். இது அதிக எரிச்சலையும் வீக்கத்தையும் ஏற்படுத்துவதோடு, பாக்டீரியாவை மற்றொரு பகுதிக்கு பரப்பும். பிம்பிள் பேட்ச் பயன்படுத்தும் போது’ பாக்டீரியா பரவுதல் இருக்காது மற்றும் மாஸ்க் உடனான உராய்வு கூட குறைக்கப்படும்.

பென்சோயில் பெராக்சைடு (Benzoyl peroxide)

publive-image

பென்சாயில் பெராக்சைடை’ கிரீம்கள், ஜெல், கிளென்சர் மற்றும் ஸ்பாட் சிகிச்சைகள் போன்ற பல வடிவங்களில் காணலாம். உங்களுக்கு சீழ் நிறைந்த முகப்பரு இருந்தால், பென்சாயில் பெராக்சைடு அதிசயங்களைச் செய்யும், ஏனெனில் இது நுண்ணுயிர் எதிர்ப்பி என்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை குறைக்க உதவுகிறது. இது உங்கள் சரும துளைகளை அவிழ்த்து, முகப்பருவின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆனால், பென்சாயில் பெராக்சைடு வறட்சியை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்ட்ராலெஷனல் ஸ்டீராய்டு (IntraLesional Steroid)

இது தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. ILS என்பது ஒரு ஊசி, தோல் மருத்துவர் ட்ரையம்சினோலோன் அசிடேட் (triamcinolone acetate) எனப்படும் ஒரு சிறிய அளவு ஸ்டீராய்டை பருவில் செலுத்துகிறார். இது 48 மணிநேரத்தில் முடிவுகளைக் காட்டத் தொடங்குகிறது.

"இருப்பினும், இவை தற்காலிக தீர்வுகள் மட்டுமே. உங்களுக்கு மீண்டும் மீண்டும் முகப்பரு வந்தால், உங்கள் மருத்துவ வரலாற்றைப் புரிந்துகொண்டு, உங்கள் முகப்பருக்களை நிர்வகிப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் பயனுள்ள நிரந்தர தீர்வை வழங்கும் ஒரு தோல் மருத்துவரை அணுகவும், ”என்று அவர் முடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment