எண்ணெய் பசையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு, ஃபேஷியல் எண்ணெய்களை (facial oils) பயன்படுத்துவதைப் பற்றிய எண்ணம்’ பயமாக இருக்கும். இது முகப்பருவுக்கு வழிவகுக்கும் என்று பலர் நம்புகிறார்கள். "ஆனால் இதுவும் பல அழகு கட்டுக்கதைகளை போன்றது தான்.
பெரும்பாலும், தோல் பராமரிப்பு வழக்கம்’ கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் உடன் கட்டுப்படுத்தப்படுகிறது; மேலும் அனைத்து சரியான காரணங்களுக்காகவும் தோல் நிபுணர்கள் அதைப் பாராட்டி வருகின்றனர்,” என்கிறார் தோல் மருத்துவர் நேஹா அஹுஜா.
அஹுஜாவின் கூற்றுப்படி, அழகான சருமம் என்பது சரியான அளவு நீர் மற்றும் எண்ணெய் உள்ளடக்கத்தின் கலவையாகும். “தோல் இயற்கையாகவே நிறைய தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாததால், நாம் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துகிறோம்; மற்றொரு புறம் ஃபேஷியல் எண்ணெய்களால் கவனிக்கப்படுகிறது, இது சருமம் அதிகப்படியான எண்ணெய்களை சுரக்காமல் பார்த்துக் கொள்கிறது.
30 வயதிற்குப் பிறகு, உடல் குறைவான எண்ணெய்களை உற்பத்தி செய்கிறது. இதனால் ஃபேஷியல் எண்ணெய்களைப் பயன்படுத்துவது முக்கியம்.
குங்குமாதி தைலம்’ பாரம்பரிய அழகு முறைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததாக நிபுணர் கூறுகிறார்.
“பொதுவாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள்’ பொதுவாக 5 சொட்டு குங்குமப்பூ மற்றும் 10 மில்லி அடிப்படை எண்ணெய் (எள் அல்லது தேங்காய்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும், இது ஒரு கனமான அமைப்பை உருவாக்குகிறது. இது சருமம் உறிஞ்சுவதை கடினமாக்குகிறது.
அதேநேரம், குங்குமப்பூ பீச் கர்னல் (saffron peach kernel) மற்றும் ரோஜா எண்ணெய்களின் கலவையுடன் தயாரிக்கப்படும் குங்குமாதி தைலம்’ சருமத்திற்கு அத்தியாவசிய வைட்டமின்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது.
“ஒருவர் முகத்தை கழுவும் போது, அவர்கள் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை இழக்கிறார்கள். இதனால் இழப்பை ஈடுசெய்ய சருமம்’ அதிக எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கிறது, இது முகப்பரு மற்றும் துளைகள் அடைபடுவதற்கு வழிவகுக்கிறது.
அதனால் ஃபேஷியல் எண்ணெய்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. முகம் கழுவிய பிறகு, ஆயில் மூலம் சருமத்தை மசாஜ் செய்வதே இதன் சிறந்த பயன்பாடாகும்,” என்று அஹுஜா அறிவுறுத்துகிறார்.
இதோ சில நன்மைகள்:
எரிச்சல் மற்றும் அழுத்தமான சருமத்தை மென்மையாக்கவும், டோனிங், ஹைட்ரேட்டிங் ஆகியவற்றுக்கு சிறந்தது.
ஈரப்பதம் இழப்பைத் தடுக்க உதவுகிறது மற்றும் அதன் இயற்கையான எண்ணெய் சுரப்பிகளை இமிடேட் செய்வதன் மூலம் சருமத்தை சமநிலைப்படுத்துகிறது.
முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும், நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை தடுக்கவும் உதவுகிறது.
தோலின் இழந்த பொலிவை மீட்டு, புத்துணர்ச்சியாக்கும்.
தோல் அழற்சி, டேனிங் மற்றும் பிக்மென்டேஷன் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது.
சரியான ஃபேஷியல் எண்ணெயைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் எண்ணெய் தன்மையை குறைக்கும்.
ஊட்டச்சத்துக்களை லாக் செய்ய உதவுகிறது.
“தோலுக்கு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் தேவை. ஆனால், உங்கள் சருமத்துக்கு எந்தவொரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும் முன், தயவுசெய்து உங்கள் தோல் மருத்துவரை அணுகவும், ”என்று அவர் முடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“