காலநிலை மாற்றம், தோல் அதன் பளபளப்பை இழக்க வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான மற்றும் ஊட்டமளிக்கும் தோல் பராமரிப்பு வழக்கத்துடன், நமது சருமத்தை அமைதிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
சருமத்தில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும், எனவே இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மற்றும் ஆயுர்வேதத்தின் பழமையான பாரம்பரியங்களில் நமது நம்பிக்கையை வைத்திருப்பது அவசியம்.
ஆயுர்வேதத்தில் இருந்து பெறப்பட்ட குங்குமாதி தைலம் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பொருளாகும். "அதிசய அமுதம்" என்று கூறப்படும் இந்த எண்ணெய்யை, தொடர்ந்து தடவினால் சருமம் தங்கம் போல் பளபளக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த எண்ணெய் சரும செல்களை புத்துணர்ச்சியூட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும், சருமத்தை பிரகாசமாக்குவதற்கும், இளமை மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை கொடுப்பதற்கும் பிரபலமானது.
குங்குமாதி எண்ணெய்’ எவ்வாறு சருமப் புத்துணர்ச்சி மற்றும் ஆன்டி-ஏஜிங் தொடர்பான சரும பிரச்சனைகளை தீர்க்கிறது என்பது இங்கே!
தோல் அமைப்பை மேம்படுத்துகிற்து
தோல் என்பது சில வகையான புரதங்களால் ஆனது. இந்த புரதங்கள் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கும். குமகுமதி போன்ற தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தும் போது, ஒருவர் சரும அமைப்பை மேம்படுத்த முடியும். குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தும் போது, முகத்தில் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்க முடியும்.
சருமத்திற்கு பொலிவைத் தரும்
இந்த ஃபேஷியல் எண்ணெய் சருமத்தைப் பாதுகாத்து குணப்படுத்தும் போது, இயற்கையான பளபளப்பை கொடுக்கும். சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், சருமத்தை இளமையாகவும், நீண்ட காலத்திற்கு புத்துணர்ச்சியாகவும் பெற உதவுகிறது. அதன் இயற்கையான திறன்களின் காரணமாக, உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் பளபளப்பை அப்படியே வைத்திருக்கும்.
முகப்பருவைக் குறைக்கிறது
பாரம்பரிய ஆயுர்வேத குங்குமாதி தைலம், பல்வேறு வகையான தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. முகப்பருக்கள் உள்ள சருமத்திற்கு குங்குமாதி எண்ணெய் ஏற்றது. இது தோல் திசுக்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம் முகப்பரு தழும்புகளின் தோற்றத்தை குறைக்கும் மற்றும் தோல் செல்களை தூண்டுகிறது. வடுக்கள், சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் மற்றும் வயதான அறிகுறிகளை அகற்ற உதவுகிறது.
பொதுவாக குங்குமாதி எண்ணெயை படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் முகத்தில் தடவுவது சிறந்தது, ஏனெனில் இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான தோல் செல்கள்’ அதிக கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருப்பதால், அவை சேதத்தை எதிர்க்கின்றன. இந்த சரும செல்கள்’ உங்கள் சருமத்தை அழகாக்குவதுடன், இளமையாகவும், துடிப்பாகவும் வைத்திருக்கும்.
இது உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தி, சருமத்தை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
சூரிய ஒளியால்தோல் டேன் ஆகும்போது’ உங்கள் உடல் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தோலில் உள்ள ரசாயனங்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.இது டேன்களை குணப்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “